தேடி வந்த சங்கீதா. யோசித்த விஜய். விஜய்யே சொன்ன அறிய ஸ்டோரி. வைரலாகும் வீடியோ.

0
11019
Vijay Sangeetha
- Advertisement -

தமிழ் சினிமாவில் எத்தனையோ நட்சத்திர தம்பதிகள் காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள். அஜித் ஷாலினி, சூர்யா ஜோதிகா, பிரசன்னா-சினேகா என்று இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால், இளையதளபதி விஜய்யின் காதல் திருமணம் சற்று வித்தியாசமானது தான். கோலிவுட்டில் சிறந்த நட்சத்திர தம்பதிகளாக திகழ்ந்து வருகிறார்கள் நடிகர் விஜய்-சங்கீதா. மேலும்,இவர்களுக்கு திருமணம் ஆகி 20 ஆண்டு காலமாக ஒன்றாக வாழ்ந்து வருகின்றார்கள்.

-விளம்பரம்-
Image result for vijay and sangeetha"

- Advertisement -

இவர்களுக்கு சஞ்சய் என்ற மகனும், சாஷா என்ற மகளும் இருக்கிறார்கள். சினிமா துறையில் மாஸ் காட்டிக் கொண்டிருக்கும் தளபதி விஜய்யின் தீவிர ரசிகை தான் சங்கீதா. தளபதி விஜய் அவர்கள் மீது கொண்ட பற்றின் காரணமாக சங்கீதா நம்ம தளபதியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆகஸ்ட் 25ஆம் தேதி 1999 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. சினிமா துறையில் பிரபலமான இயக்குனரின் மகனாக விஜய் இருந்தாலும் அவருடைய படங்கள் எல்லாம் ஆரம்பத்தில் தோல்வியில் தான் முடிந்தது. பின்னர் அவருக்கு திருப்பு முனையாக அமைந்த படம் என்று பார்த்தால் “பூவே உனக்காக” படம் தான்.

இதையும் பாருங்க : விஐபி பட நடிகை சுரபியா இப்படி ஒரு போட்டோ ஷூட்டை நடத்தியுள்ளார். படம் கிடைச்சா தான.

இந்த படத்திற்கு பின் தான் விஜய் அவர்களுக்கு சினிமா துறையில் பட வாய்ப்புகள் வர தொடங்கின. பின்னர் விஜய்க்கு என ஒரு தனி ரசிகர் பட்டாளமும் கூடியது. மேலும்,விஜய்க்கு ரசிகர்கள் மட்டும் இல்லைங்க தீவிர பெண் ரசிகையும் உள்ளார். அதில் ஒருவர்தான் நம்ப சங்கீதா. விஜய்க்கும்,சங்கீதாவுக்கு எப்படி திருமணம் நடந்தது என்று கடந்த சில வருடங்களுக்கு முன்னர் விஜய் அளித்த பேட்டி ஒன்றில் விஜய் பகிர்ந்த வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-
https://www.youtube.com/watch?v=BwNmmmA97-4&feature=youtu.be

விஜய் மற்றும் சங்கீதா இருவருக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன்ஆகஸ்ட் 25ஆம் தேதி 1999 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.பின் 2000ம் ஆண்டு சஞ்சய் என்ற மகனும், 2005 ஆம் ஆண்டு திவ்யா என்ற மகளும் பிறந்தார்கள். இந்த வருடத்தோடு இவர்களுக்கு திருமணமாகி இருபது வருடங்கள் வெற்றிகரமாக முடிந்துள்ளது. இவர்கள் திருமண வாழ்க்கையைப் பார்த்து விஜய்-சங்கீதாவுக்கு ரசிகர்களும்,சினிமா பிரபலங்களும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்

Advertisement