பேனரால் உயிரை இழந்த சுபஸ்ரீ.! அதிராகரிகளை வெளுத்து வாங்கிய தளபதி.! இதுக்கெல்லாம் தில் வேணும்பா.!

0
1481
Bigil-subhasree
- Advertisement -

தென்னிந்திய திரைப்பட உலகை கலக்கி கொண்டிருக்கும் இளையதளபதி விஜய் அவர்களின் 63வது படமான பிகில் படம் சில வாரங்களில் வெளிவர உள்ளது. அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள இந்த பிகில் படம் அக்டோபர் 27ஆம் தேதி அதாவது தீபாவளியன்று திரையரங்குக்கு வரப்போகிறது என்று படக்குழுவினர் தெரிவித்தனர். இதனை கொண்டாடும் வகையில் பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல் அதிகாரப்பூர்வமாக சமூக வலைத்தளங்களில் தயாரிப்பாளர் அறிவித்தார்கள். இதனால் விஜய் ரசிகர்கள் ‘தளபதி63’ என்ற ஹாஸ்டக் ஒன்றை உருவாக்கி அதில் விஜய்யின் பிகில் படம் சம்பந்தமான தகவல்களை பதிவு செய்து வருகின்றனர். அந்த வரிசையில் பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல்கள் வலைதளங்களில் வைரலாக பரவி கொண்டும் வருகின்றன.இது மட்டுமில்லாமல் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சாய்ராம் கல்லூரியில் நடைபெற்றது.

-விளம்பரம்-

தளபதி விஜய் எப்பவுமே ஒரு விழாவில் கலந்து கொண்டால் மக்கள் அனைவரும் எதிர்பார்க்கும் ஒரே விஷயம் அவர் எதைப் பற்றி பேச போகிறார் என்பதுதான். மேலும், அவர் பொதுநல விஷயங்களையும் ,அரசியல் சம்பந்தப்பட்ட விஷயங்களை கூட பேசி தன்னுடைய கருத்துக்களை அந்த இடத்தில் பதியவைப்பது வழக்கமான ஒன்றுதான்.அந்த வகையில் நேற்று நடந்த பிகில் இசை வெளியீட்டு விழாவில் விஜய் அவர்கள் பேசியது , சில நாட்களுக்கு முன்னால் பள்ளிக்கரணை சாலையில் நடந்த கோர சம்பவம் பற்றி மன வருத்தத்துடன் பேசினார். ஒரு சில அரசியல்வாதிகள் தங்களின் செல்வாக்கை காட்டுவதற்காகவும், மக்களிடையே பிரபலம் ஆகவும் இப்படி திருமண விழாவின் போது சாலைகளில் மீடியன் நெடுக்க,வாகனங்களை மறைக்கும் அளவு சாலை ஓரங்களிலும் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தது. அதிலிருந்து பேனர் சரிந்து அந்த வழியில் வந்த சுபஸ்ரீயின் மீது விழுந்தது அவர் நிலை தடுமாறி கீழே விழுந்ததார். அதன் வழியே வந்த தண்ணீர் லாரி அவர் மீது மோதி நெஞ்சை பதற வைக்கும் அளவிற்கு இந்த கொடுமையான சம்பவம் நிகழ்ந்து இருந்தது. உடனே காவல் துறையும் விரைந்து வந்து சுபஸ்ரீயை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது. எல்லாம் ஒரு நல்ல விஷயம் தான். ஆனால், சுபஸ்ரீயின் இந்த அநியாயமான மரணத்திற்கு முக்கிய காரணம் யார் என்று அவர்களை கைது செய்யவில்லை.

- Advertisement -

அதை விட்டு பேனர் பிரிண்ட் செய்தவர், லாரி டிரைவர், பேனர் கட்டியவர் என்று மக்களின் கண்துடைப்புக்காக அவர்களை கைது செய்து வந்தது காவல்துறை என்று வேதனையுடன் விஜய் கூறினார். மேலும் சுபஸ்ரீ வழக்கில் யார் மேல பழி போடுவது என்று தெரியாமல்? லாரி ஓட்டுனர் மேலேயும், பேனர்களை அடித்து கொடுத்தவர்கள் மேலயும் பழி போடறாங்க .எப்படியாவது இந்த வழக்கை முடிக்க வேண்டும் என்ற நோக்கில்தான் செயல்படுகிறார்கள் தவிர யார் உண்மையான குற்றவாளி என்று ஆராயவில்லை. மேலும் யாரை எங்கே உட்கார வைக்கணுமோ , நாம அவர்களை அங்கே உட்கார வைத்தால் நல்லா இருக்கும் என்று இதை மக்களுக்கு புரியும் வகையில் கூறினார். இந்த பேச்சின் மூலம் பல அரசியல்வாதிகள் பீதி அடைவார்கள் என்று சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பதிவாகி வருகின்றன.

Image result for subhasri

சுபஸ்ரீ மரணத்திற்கு முழுக்க முழுக்க காரணம் அரசியல்வாதிகளின் அலட்சியத்தாலும், பொறுப்பு இன்மையாலும் ஏற்பட்டது தான் என்று இணையங்களில் பரவி வருகிறது. விஜய் அவர்களின் இந்த வெளிப்படையான, யாருக்கும் பயப்படாமல் பேசிய இந்த பேச்சை பார்த்து கமல்ஹாசன் ஆச்சரியத்தில் வியந்து போனார். மேலும் கமல்ஹாசன் அவர்களை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்தித்த போது பிகில் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது குறித்து கேட்டார்கள். அதற்கு உலகநாயகன் கூறியது, எல்லாருக்குமே ஒரு நல்ல மேடை அமைவதில்லை அப்படி அமைந்தால் அதுவே அவர்களின் வெற்றிக்கு காரணம் என்றும் ,அவருக்கு கிடைத்த இந்த மேடையை பயன்படுத்தி ஒரு நியாயமான விஷயத்திற்கும், நீதிக்கும், உண்மைக்கும் குரல் கொடுத்திருப்பது மிகவும் பாராட்டப்பட வேண்டிய விஷயம் என்று கூறினார். மேலும் விஜய் தம்பிக்கு என்னுடைய மனமார வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன் என்று கமல்ஹாசன் அவர்கள் பேட்டி அளித்துள்ளார்

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement