ரஜினி சூப்பர் ஸ்டாரா? அல்லது விஜய் சூப்பர் ஸ்டாரா? என்ற சர்ச்சை நிலவி வரும் நிலையில் ரஜினிகாந்த் நடித்த சூப்பர் ஹிட் படத்தில் விஜய் நடித்திருக்கிறார் என்ற தகவல் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது.தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் அஜித் நடிக்கும் திரைப்படங்கள் கடந்த பொங்கலன்று வெளியானது. பரபரப்பாக சென்று கொண்ட வசூல் வேட்டையில் நடிகர் அஜித் நடித்த “துணிவு” திரைப்படம் அதிக வாசல் செய்திருந்தாலும் பின்னர் விஜய்யின் “வாரிசு” குடும்ப படம் என்பதினால் வசூலில் தற்போது முன்னிலை வகித்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் இது அதிகாரபூர்வ அறிவிப்பு கிடையாது.
வசூலில் முன்னிலை :
மேலும் வாரிசு படம் ஆந்திராவில் நேற்று முன்தினம் 14ஆம் தேதி வெளியான நிலையில் வசூல் உலகளவில் அதிகரித்து இருப்பதாகவும் இன்னும் சில நாட்களில் அதிகாரப்பூர்வ வசூல் என்னவென்று அறியலாம் என கூறப்படுகிறது. இந்த நிலையில் வாரிசு படம் வெற்றியாக சென்று கொண்டிருப்பதினால் நடிகர் விஜய் வாரிசு படக்குழுவினரை அழைத்து சென்னை ஈசி ஆரில் உள்ள பெரிய நட்சத்திர விடுதியில் அவர்களுக்கு விருந்தளித்தார்.
சூப்பர் ஸ்டார் சர்ச்சை :
விஜய் சூப்பர் ஸ்டாரா? என்ற சர்ச்சை வாரிசு படத்திற்கு முன்பிருந்தேன் தொடங்கிய நிலையில் வாரிசு பட தயாரிப்பாளர் தில் ராஜு விஜய் தான் சூப்பர் ஸ்டார் என்று கூறியதும் அப்போது சர்ச்சையாகி இருந்தது. அதனைத் தொடர்ந்து இசை வெளியீட்டு விழாவில் சரத்குமார் கூறியதும் மிகப்பெரிய சர்ச்சையாகி ரசிகர்கள் விமர்சித்து வந்த நிலையில் அதற்கு அவர் விளக்கமும் கூறியிருந்தார் நடிகர் சரத்குமார்.
சதிஷ் கூறியது :
மேலும் இது குறித்து காமெடி நடிகர் சதிஷ் கூறுகையில். வீட்டை விட்டு வந்து ஒவ்வொருவரும் ஸ்டார் அந்தஸ்தை ரசிகர்கள் கொடுக்கிறார்களே அதுவே பெரிய விஷயம் தான். இதில் பெரிய ஸ்டார் சிறிய ஸ்டார் என்று கிடையாது, ஸ்டார் என்றாலே பெரியவர்கள் தான் என்று கூறினார் சதிஷ். இப்படிப்பட்ட நிலையில் தான் விஜய் ஏற்கனவே ரஜினி நடித்த சூப்பர் ஹிட் படத்தில் நடித்திருக்கிறார் என்ற தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
ரஜினி படத்தில் விஜய் :
கடந்த 1985 ஆம் ஆண்டு விஜய்யின் தந்தை எஸ் கே சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான “நான் சிகப்பு மனிதன்” என்ற படத்தில் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்திருப்பார். இப்படத்தில் தான் விஜய் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் டைட்டில் வரும் போது கையில் ஒரு பதாகையை ஏந்தி நடித்திருப்பார். ஆனால் இந்த கதாபாத்திரம் சில நொடிகளை நீடித்ததால் அதை யாரும் கண்டுபிடித்து இருக்க மாட்டார்கள்.
ThalapathyVijay𓃵 in SUPERSTAR Rajinikanth𓃵 movie Naan Sigappu Manithan 1985 ♥️😍@rajinikanth @actorvijay #Jailer #Thalapathy67 pic.twitter.com/Vyn8xJHw2a
— RajiniVjs Fans Club🛺 (@Rajini_vjs_fans) February 1, 2023
ஆனால் தற்போது விஜய் சூப்பர்ஸ்டாரா? அல்லது ரஜினி சூப்பர்ஸ்டாரா? என்ற பிரச்சனை நிலவிவரும் நிலையில் ரஜினிகாந்த் படத்தில் ஏற்கனவே விஜய் நடித்திருக்கிறார் என்பதை அறிந்த ரசிகர்கள் இந்த தகவலை வைரலாக்கி வருகின்றனர். மேலும் தற்போது நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் “ஜெயிலர்” படத்தில் நடித்து வருகிறார். பீஸ்ட் படத்தின் படு தோல்விக்கு பிறகு ரஜினிகாந்த நடிக்கும் இந்த படத்தை எப்படியாவது வெற்றிப்படமாக ஆக்க வேண்டும் என்ற நோக்கில் இயக்கி வருகிறார் நெல்சன்.
ரஜினிகாந்த் அடுத்து நடிக்கும் படங்கள் :
மேலும் ரஜினிகாந்த் இப்படத்தை தொடர்ந்து தன்னுடைய மகன் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் வெளியாக இருக்கும் “லால் சலாம்” என்ற படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்திற்காக ரஜினிகாந்த் 7 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. மேலும் இப்படத்தை தொடர்ந்து லைக்கா நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்திலும் ரஜினிகாந்த நடிக்க இருக்கிறார் என்பது வெளியாகி இருக்கிறது.