ஒரு லாரி ஓனரின் உண்மை கதை – எப்படி இருக்கு ‘விஜயானந்த்’ முழு விமர்சனம் இதோ.

0
489
- Advertisement -

இயக்குனர் ரிஷிகா ஷர்மா இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் விஜயானந்த். இந்த படத்தில் – நிஹால், அனந்த் நாக், சிரி பிரகலாத் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு கோபி சுந்தர் இசையமைத்திருக்கிறார். விஆர்எல் பிலிம் புரொடக்ஷன்ஸ் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. இன்று வெளியாகி இருக்கும் விஜயானந்த் படம் ரசிகர்களின் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

தொழிலதிபர் விஜய் சங்கேஷ்வர் என்பவருடைய பயோபிக் படம். இவர் கர்நாடகாவில் ஒரு லாரியுடன் தன்னுடைய வியாபாரத்தை துவங்கி இன்று உலகம் முழுவதும் 5000க்கும் மேற்பட்ட லாரிகள், 200க்கும் மேற்பட்ட பஸ்கள் என்ற லாஜிஸ்டிக்ஸ் கம்பெனியை நடத்தி வருகிறார். இவர் 1996 ஆம் ஆண்டு கர்நாடகாவில் முதல் பாஜக எம் பி ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1960 க்கு பிறகு காலகட்டத்தை வைத்து படம் தொடங்குகிறது.

- Advertisement -

படத்தில் விஜய் சங்கேஷ்வர் கர்நாடகாவில் சிறிய ஊரான கதக் என்ற ஊரில் தன்னுடைய அப்பாவின் பிரின்டிங் பிரஷில் வேலைக்கு உதவியாக இருக்கிறார். இன்னும் பிரிண்டிங் அதிகமாக செய்ய செமி ஆட்டோமேட்டிக் மெஷினை வாங்கி வருகிறார். அப்போது இவர் லாரி வாங்க நினைக்கிறார். ஆனால், விஜய் சங்கேஷ்வர் தந்தை தடுக்கிறார். பின் பிரச்சனைகளுக்கு பிறகு விஜய் சங்கேஷ்வர் புதியதாக லாரி வாங்கி டிரான்ஸ்போர்ட் வியாபாரித்தில் இறங்குகிறார். ஆனால், மார்க்கெட்டில் ஏற்கனவே உள்ள வண்டிகள் மூலம் அவருக்கு பிரச்சனை ஏற்படுகிறது.

அதை எதிர்த்து போராடி மார்க்கெட்டில் உள்ள பெரிய மனிதர் உதவியுடன் கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய டிரான்ஸ்போர்ட்டை உருவாக்குகிறார் விஜய் சங்கேஷ்வர். பின் அவரைப் பற்றியும் அந்த நிறுவனத்தை பற்றியும் தவறான செய்திகள் வெளியாகிறது. அதை சமாளிக்க சொந்தமாகவே அவர் நாளிதழை ஆரம்பிக்கிறார். அதிலும் போட்டிகள் பிரச்சனைகள் என்று வருகிறது. இப்படியே இவருடைய வியாபாரமும் பயணமும் தொடர்கிறது. அதற்குப்பின் இவர் ஒரு லாரியோடு இல்லாமல் ஆயிரக்கணக்கான லாரிகளை உருவெடுத்து தனியாக தொழில் சாம்ராஜ்யை உருவாக்கிய கதை.

-விளம்பரம்-

இதை கமர்சியலாக இயக்குனர் கொடுத்து இருக்கிறார். அச்சிடும் இயந்திரத்தை வைத்துக்கொண்டு மிகப் பெரிய தொழில் சாம்ராஜ்யத்தை உருவாக்கினார் விஜய் சங்கேஷ்வர். படத்தில் விஜய் சங்கேஷ்வர் கதாபாத்திரத்தில் நிஹால் நடித்திருக்கிறார். அவருடைய அப்பா பி.ஜி.சங்கேஸ்வராக ஆனந்த் நாக் நடித்திருக்கிறார். இவர்களை அடுத்து படத்தில் வரும் பிற கதாபாத்திரங்களும் தங்கள் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள். படத்தை சுவாரஸ்யமாக கொண்டு செல்ல இயக்குனர் பல முயற்சிகள் மேற்கொண்டு இருக்கிறார். ஆனால், பெரிதாக கை கொடுக்கவில்லை.

ஒளிப்பதிவும், இசையும் படத்திற்கு துணையாக பக்கபலமாக இருந்திருக்கிறது. தொழிலில் வெற்றி பெற துணிவு, தன்னம்பிக்கை, நேர்மை தேவை என்பதை இன்னும் சுவாரசியமாக கொடுத்திருந்தால் இன்றைய இளைஞர்களுக்கு ஊக்கமாக இந்த படம் அமைந்திருக்கும் என்று கூறப்படுகிறது. படம் என்பது 70, 80, 90 என்று அடுத்தடுத்த காலகட்டங்களுக்கு ஏற்றவாறு நகர்வதால் அந்தந்த காலத்திற்குரிய தோற்றங்களை இயக்குனர் காண்பித்திருக்கிறார். சினிமா தானம் இல்லாத கதை நகர்வு கொஞ்சம் நெருடலாக இருக்கிறது. ஆனால், புதிதாக தொழில் தொடங்க துடிக்கும் இளைஞர்களுக்கு இந்த படம் ஒரு நம்பிக்கை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிறை:

இளைஞர்களுக்கு ஒரு உத்வேகமான கதை.

நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்

ஒளிப்பதிவும் பின்னணி இசையும் படத்திற்கு பக்கபலமாக இருக்கிறது

கதைக்களம் சிறப்பு

குறை:

கதைக்களத்தில் இன்னும் சுவாரசியத்தை காண்பித்து இருந்தால் படம் சூப்பர் ஹிட் ஆகியிருக்கும்.

சினிமா தனம் இல்லாமல் இருந்திருக்கலாம்

ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள்

மொத்தத்தில் விஜயானந்த்- உழைப்பின் வெற்றி

Advertisement