அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்த்.! சமீபத்தில் கண்டு கழித்த படம் இது தான்.!

0
308
Vijyakanth

தே மு தி க தலைவரும் நடிகருமான விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல் நல குறைபாட்டால் அவதி பட்டு வருகிறார். இதற்காக அடிக்கடி வெளிநாடு சென்று சிகிச்சை பெற்றும் வருகிறார். இந்நிலையில் கடந்த டிசம்பர் 18 மீண்டும் உடல் நலம் சற்று பாதிக்கப்பட்டுள்ளது இதனால் மீண்டும் அமெரிக்கா சென்றார் விஜயகாந்த்.  

விஜயகாந்தின் உடல் நிலை மிகவும் மோசமாக உள்ளது அதனால் அவர் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார் என்று பல செய்திகளும் சமூக ஊடகங்களில் பரவ தொடங்கின. ஆனால், சமூக செய்தி பொய்யானது என்றும் அவர் சாதாரண பரிசோதனைக்காக தான் அமெரிக்கா சென்றிருக்கிறார் என்றும் பின்னர் தான் தெரியவந்தது.

இதையும் படியுங்க : அஜித்தும் விஜயகாந்தும் ஒன்னு.! எந்த விஷயத்தில் தெரியுமா.!ஜோதிகா புகழாரம்.!

விஜயகாந்த் நலமாக இருக்கிறார் என்பதற்கு ஆதாரமாக
அமெரிக்காவில் தனது மனைவி மற்றும் நண்பர்களுடன் விஜயகாந்த் அவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடிய போட்டோக்கள் இணையத்தில் முன்பே வெளியானது .

இந்நிலையில் தனது குடும்பத்தாருடன் அமெரிக்காவில் புத்தாண்டை கொண்டாடிய விஜயகாந்த், சமீபத்தில் அங்குள்ள
ஐ மேக்ஸ் திரையில் அக்வாமென் படத்தை  பார்த்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது ட்விட்டரில் வெளியாகியுள்ளது. அதில் பார்ப்பதற்கு விஜயகாந்த் நல்ல ஆரோக்யமுடன் இருக்கிறார்.