சிவகார்த்திகேயனை பாராட்டிய விஜய்..! மேடையில் நடந்த சம்பவம்.! தலைக்கனம் இல்லாத தளபதி.!

0
392
Sivakarthikeyan

தமிழ் சினிமாவில் நடிகர் சிவகார்த்திகேயன் கடந்து வந்த பாதை அவ்வளவு எளிதானதல்ல. தொகுப்பாளராக தனது பயணத்தை தொடங்கிய சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக விளங்கி வருகிறார். தற்போது இவரது நடிப்பில் “சீமராஜா” திரைப்படம் நாளை (செப்டம்பர் 13) வெளியாகவுள்ளது.

sivakarthikeyan

இந்த படத்திற்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் சிவகார்த்திகேயன், நடிகர் விஜய்யிடம் இருந்து பெற்ற பாராட்டை நினைவு கூர்ந்துள்ளார். நடிகர் சிவகார்த்திகேயனுக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு விஜய் அவார்ட்ஸ்ஸில் “சிறந்த என்டர்டைனர்” விருது வழங்கபட்டது. அந்த விருதினை நடிகர் விஜய் கையால் பெற்றார் நடிகர் சிவகாத்திகேயன்.

அப்போது மேடையில் பேசிய விஜய், நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த அணைத்து படங்களையும் நான் பார்த்துள்ளேன். காமெடி ஆகட்டும், நடனமாகட்டும் அவர் சிறப்பாக செய்கிறார், குழந்தைகளும் அவரை மிகவும் பிடித்திருக்கிறது .அவர் அந்த இடத்தை பிடிச்சிட்டாரு என்று பேசி இருந்தார்.

vijay actor

இந்த சம்பவத்தை சமீபத்தில் சீமராஜா படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் நினைவூட்டிய நடிகர் சிவகார்த்திகேயன், விஜய் சார் எவ்வளவு பெரிய நடிகர் , எனக்கு விருது வழங்கும் போது, அவர் மேடையில் குழந்தைகளை பிடித்துவிட்டீர்கள் என்று சொன்னது எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது. இப்போ பாத்தா கூட செமையா ஆடறீங்க சிவா என்பார். ஆனா, நான் சும்மா சொல்லாதீங்க சார்னு சொல்லி இருந்தேன்.

அவரு எவ்ளோ பெரிய நடிகர், அவர் டான்ஸ் பாத்து ராசிக்காதவங்களே இருக்க மாட்டாங்க. ஆனா, அவர் என் டான்ஸ் பத்தி சொல்லும் போது எனக்கு மிகவும் பெருமையா இருந்துச்சி என்று பேசியுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன் .