‘நல்ல குரல் வளம்’ – யூடுயூபர் அபிஷேக்கை மீண்டும் ஒரு முறை வச்சி செய்த விஜய் ஆண்டனி.

0
1624
vijayantony-1
- Advertisement -

யூடுயூபில் தன்னை ஒரு அதி மேதாவி போல உணர்ந்து கொண்டு பிரபலங்களிடம் அடிக்கடி மொக்கை வாங்கி வரும் சினிமா பையன் என்று தனக்கே செல்லப் பெயர் வைத்துகொண்ட அபிஷேக்கை மீண்டும் ஒரு முறை பங்கமாக கலாய்த்து உள்ளார் நடிகர் விஜய் ஆண்டனி. தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக இருந்து பின்னர் நடிகராக பட்டைய கிளப்பி கொண்டு இருப்பவர் விஜய் ஆண்டனி.

-விளம்பரம்-

நான் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான விஜய் ஆண்டனி பின்னர் பல்வேரு படங்களில் நடித்து விட்டார். இவரது படங்களில் ரசிகர்கள் மத்தியில் எப்போதும் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிடும். ஆனால், சமீப காலமாக இவரது படங்கள் பெரிதாக ஓடவில்லை. இப்படி ஒரு நிலையில் இவர் இயக்குனர் ஆனந்த் கிருஷ்ணன் இயக்கத்தில் ‘கோடியில் ஒருவன்’ படத்தில் நடித்து உள்ளார்.

இதையும் பாருங்க : பெயரை பச்சை குத்திய ரசிகர் – மியா கலீபாவின் குணம் ஏன் சமந்தாவிற்கு இல்லை. கழுவி ஊற்றும் ரசிகர்கள்.

- Advertisement -

விஜய் ஆண்டனி, ஆத்மிகா உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படி ஒரு நிலையில் அபிஷேக்கின் யூடுயூ பக்கமான ‘ஓப்பன் பண்ணா’ என்ற யூடுயூப் பக்கத்தில் இந்த படம் குறித்த பேட்டி ஒன்றில் விஜய் ஆண்டனி மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

வழக்கம் போல இந்த படத்தை பற்றிய பல்வேரு சுவாரசியமான விஷயங்கள் குறித்து பேசினார் விஜய் ஆண்டனி. இப்படி ஒரு நிலையில் இந்த பேட்டியில் அபிஷேக் தன் பாடல் திறமையை காட்ட பாடல் ஒன்றை பாடி இருந்தார். இதை கேட்டு அருகில் இருந்த ஆத்மிகா சிரிப்பை அடக்க முடியாமல் அமர்ந்து இருந்தார்.

-விளம்பரம்-

ஆனால்,அவர் பாடி முடித்ததும் விஜய் ஆண்டனி ‘நல்ல குரல் வளம் இருக்கிறது, நல்லா பாடலாம். சரி இவரை பாட வைத்துவிடலாம் ‘ என்று மிகவும் லாவகமாக அபிஷேக்கை கலாய்த்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

வீடியோவில் 29 : 51 நிமிடத்தில் பார்க்கவும்

அபிஷேக், விஜய் ஆண்டனி இடம் இப்படி மொக்கை வாங்குவது புதிதான விஷயம் கிடையாது. கடந்த 2018 ஆம் ஆண்டு விஜய் ஆண்டனியை பேட்டி எடுத்தபோது அபிஷேக், உங்களுக்கு ரிவிவரின் வாழ்க்கையை பற்றி தெரியுமா என்று விளக்கம் ஒன்றை கொடுத்தார். அப்போது விஜய் ஆண்டனி அவரிடம் மிகவும் நக்கலாக கலாய்த்து இருந்தார். அந்த வீடியோவும் அப்போது வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement