தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். இவருடைய படைப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று தந்திருக்கின்றது. தற்போது விஜய் அரசியலில் இறங்கி இருக்கிறார். இவர் தமிழக வெற்றிக் கழகம் என்று தன்னுடைய கட்சியின் பெயரை அறிவித்திருந்தார். அதை தொடர்ந்து அரசியல் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இவருடைய பேச்சு முழு அரசியல்வாதியாக இருக்கிறது என்று பலரும் பாராட்டிருந்தார்கள்.

இதை அடுத்து சில மாதங்களுக்கு முன்பு தான் தமிழக வெற்றி கழகத்திற்கு விசில் சின்னம் வழங்கப்பட்டிருக்கிறது. இதை கட்சி தொண்டர்கள், உறுப்பினர்கள் எல்லோருமே கொண்டாடி இருந்தார்கள். விழாவில் விஜய், நம்ம சின்னம் விசில், உங்க சின்னம் விசில், வெற்றி சின்னம் விசில், கப்பு முக்கியம் பிகிலு என்று கூறி விசில் அடித்து தன்னுடைய கட்சி சின்னத்தை அறிவித்திருந்தார். இதை அடுத்து ஏப்ரல் 23ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவித்திருக்கிறார்கள்.
விஜய் அரசியல்:
அதற்குப்பின் விஜய் தன்னுடைய கட்சி சார்பில் 234 தொகுதிகளும் நிற்கப்போகும் வேட்பாளர்களையும் அறிவித்திருந்தார்.
தமிழ்நாட்டில் தவெக தனித்து போட்டியிடுகிறது. விஜய் இந்த தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். அந்த வகையில் பெரம்பூர் தொகுதியில் நேற்று விஜய் அவர்கள் வேட்பு மனு தாக்குதல் செய்திருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் மனு தாக்கல் செய்யும் போது சொத்து மதிப்பு விவரங்களை பற்றி பிரமாணம் பத்திரமாக தாக்குதல் செய்ய வேண்டும்.
https://www.youtube.com/watch?v=OdBxTIs7mos
வேட்புமனு தாக்கல்:
அந்த வகையில் நடிகரும் தவெக தலைவருமான விஜய்யின் சொத்து மதிப்பு குறித்த விவரங்களை வெளியாகி இருக்கிறது. அதன் பெயரில் விஜய்யின் மொத்தம் 404.58 கோடி மதிப்பில் சொத்துக்கள் உள்ளது. தன்னுடைய பெயரில் 11.51 கோடிக்கு அசையா சொத்துக்கள் இருப்பதாக கூறியிருக்கிறார். 110 சவரன் தங்க நகைகள் தன்னிடம் இருப்பதாகவும் கூறியிருக்கிறார். தன்னிடம் ஐந்து கார்கள் உள்ளதாகவும், எந்த கடனும் இல்லை என்றும் விஜய் கூறியிருக்கிறார். அது மட்டும் இல்லாமல் மனைவி சங்கீதாவின் சொத்து விவரத்தில்
சங்கீதாவுக்கு சுமார் 391 சவரன் நகைகள் உள்ளதாகவும், 2 கிலோ வெள்ளி,134.91 கேரட் வைரம்
இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
View this post on Instagram
சொத்து விவரம்:
இப்படி தன்னுடைய மனைவி சங்கீதாவுக்கு 15,51,79,421 சொத்துக்கள் உள்ளதாக தெரிவித்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் ஐந்து சொகுசு கார்கள் விஜய் வைத்து இருக்கிறார். அதில்3 கோடி மதிப்புள்ள Toyato Lexus 350, 2 கோடி மதிப்புள்ள BMW 17 கார், 1.6 கோடி மதிப்புள்ள Toyato Vellfire, 80 லட்சம் மதிப்புள்ள L BMW 530, 5.35 லட்சம் மதிப்புள்ள மாருதி சுவிப்ட் கார்கள் உள்ளன. கடந்த ஆண்டுதான் டிவிஎஸ் எக்ஸெஎல் டூ வீலரை வாங்கி இருக்கிறார் விஜய். அதனுடைய மதிப்பு 67 ஆயிரம் என்றும் கூறப்படுகிறது. இவர் தன் வீட்டில் வேலை செய்யும் நபர்களுக்காக இந்த டூ வீலரை வாங்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது






