தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் நடிகர் சூர்யா. சமீபத்தில் நடைபெற்று வரும் இயற்கை அழிவுகள் அனைத்தும் சூர்யாவின் படங்களில் வரும் காட்சிகள் போலவே இருக்கிறது என்று மீம் கிரியேட்டரகள் கிளப்பி விட பின்னர் சூர்யா படங்களில் வரும் காட்சிகளை தற்போது நாட்டில் நடக்கும் பிரச்சனைகளோடு ஒப்பிட்டு பல்வேறு மீம்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. சூர்யா நடித்த ஏழாம் அறிவு திரைப்படத்தில் சீனாவில் இருந்து வரும் ஒரு நபர் கெட்ட வைரஸை பரப்புவது போன்ற காட்சி காண்பிக்கப்படும்.
தற்போது உலகம் முழுவதும் சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் பரவி உள்ளது. அதே போல சமீபத்தில் சூர்யா நடித்த காப்பான் படத்தில் வெட்டுக்கிளிகளை பற்றிய காட்சிகள் இடம் பெற்று இருக்கும். அதே போல் வடநாட்டில் விளைநிலங்களில் வெட்டுக்கிளிகள் புகுந்து அட்டகாசம் செய்துவந்தன. இதனால் நெட்டிசன்கள் சூர்யாவை ட்ரோல் செய்யும் மீம்ஸ்களை வெளியிட்டு வந்தனர்.
இதையும் பாருங்க : அட, சாந்தனு மனைவி கிகிக்கு ஒரு அக்கா இருக்காங்களா – முதல் முறையாக அவரே வெளியிட்ட புகைப்படம்.
சூர்யா நடித்த படங்களில் நடக்கும் சம்பவங்கள் எல்லாம் நிஜத்திலேயே நடக்கிறது என்று அடிக்கடி மீம்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் வெளியான விஜய்யின் ‘பீஸ்ட்’ பட போஸ்டரையும் அன்றே கணித்த சூர்யாவுடன் ஒப்பிட்டு வருகின்றனர் நெட்டிசன்கள். நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘பீஸ்ட்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஜூன் 22 ஆம் தேதி வெளியானது.
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஜய் கையில் வைத்திருக்கும் ஷாட் கன்னில் ஸ்கோப் இருப்பதை கண்டு பலரும் கலாய்த்தனர். ஆனால். பல்வேறு படங்களில் ஷாட் கன்னில் ஸ்கோப் பயன்படுத்தி இருப்பதை ஆதாரமாக விஜய் ரசிகர்கள் பகிர்ந்து வந்தனர். இப்படி ஒரு நிலையில் ஆதவன் படத்தில் சூர்யா, ஷாட் கன்னில் ஸ்கோப் பயன்படுத்திய புகைப்படத்தை பதிவிட்டு அன்றே கணித்தார் சூர்யா என்று கலாய்க ஆரம்பித்துவிட்டனர்.