‘எனக்கும் மீம்ஸ் போட்டு இருக்கீங்களே’ – பீஸ்ட் படத்தின் Art Director நெகிழ்ச்சி பதிவு (அட, இந்த நடிகர் தான் இப்படி ஒரு செட்ட போட்டதா)

0
1133
beast
- Advertisement -

பீஸ்ட் படத்தில் இடம்பெறும் மால் செட் குறித்த தகவல் ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக நெல்சன் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் நயன்தாராவை வைத்து கோலமாவு கோகிலா என்ற படத்தை இயக்கியதன் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு இயக்குனராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டாக்டர் படத்தை இயக்கி இருந்தார். இந்த படமும் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. இதனைத் தொடர்ந்து மூன்றாவது படமாக நெல்சன் அவர்கள் விஜய்யை வைத்து பீஸ்ட் என்ற படத்தை இயக்கி இருக்கிறார்.

-விளம்பரம்-
beast

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே பாக்ஸ் ஆபீஸில் இடம்பெறும். கடைசியாக விஜய்யின் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்றிருந்தது. இந்த படத்தை தொடர்ந்து தற்போது விஜய் அவர்கள் பீஸ்ட் என்ற படத்தில் நடித்து உள்ளார். மேலும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள்.

- Advertisement -

பீஸ்ட் படத்தின் பாடல்கள்:

இந்த படத்தில் அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து இருக்கிறார். தற்போது இந்த படத்தின் இறுதி கட்ட பணிகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றது. மேலும், இந்த படத்தின் அரபிக்குத்து பாடல், ஜாலியோ ஜிம்கானா பாடல்கள் வெளியானதை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அதுமட்டும் இல்லாமல் இந்த பாடலுக்கு ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என பலரும் நடனமாடி வீடியோக்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார்கள். பீஸ்ட் படம் வருகிற ஏப்ரல் 13 ஆம் தேதி உலகமெங்கும் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

beast

பீஸ்ட் படத்தின் ட்ரைலர்:

மேலும், இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் விஜய் ‘வீர ராகவன்’ என்ற பெயரில் நடித்து இருக்கிறார். ட்ரெய்லரில் ஒரு மால்லை பயங்கரமான தீவிரவாதிகள் ஹைஜாக் பண்ணுகிறார்கள். இந்திய உளவுத்துறையில் விஜய் பணிபுரிந்து வருகிறார். எதர்ச்சையாக கடத்தப்படும் மால் ஒன்றில் விஜயும் சிக்கிக் கொள்கிறார். அப்போது அரசாங்கத்திற்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடக்கிறது. கடத்தப்பட்ட மாலில் தனது துறையை சேர்ந்த ஸ்பை வீர ராகவன் இருப்பதை அறிந்து அவரிடம் மால்லையும் மக்களையும் காப்பாற்றும் பொறுப்பை செல்வராகவன் ஒப்படைக்கிறார்.

-விளம்பரம்-

பீஸ்ட் மால் செட் போட்டவர் குறித்த தகவல்:

இந்த கடத்தலில் விஜய் எப்படி மக்களைக் காப்பாற்றினார்? இதன் பின்னணி என்ன? என்பது தான் சுவாரஸ்யமே என்று கூறப்படுகிறது. மேலும், பீஸ்ட் படத்தின் டிரெய்லரில் விஜய் தாண்டி அதிகமாக மக்கள் கவனத்தை ஈர்த்தது மால் தான். இந்த நிலையில் பீஸ்ட் படத்தின் மால் குறித்த ஒரு ஸ்பெஷலான தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், இந்த படத்தில் கலை இயக்குனராக இருந்தவர் கிரண். இவர் வேற யாரும் இல்லைங்க, vip, அனேகன் போன்ற தனுஷ் படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பீஸ்ட் படத்தின் மால் உருவானதற்கு பின்னால் இருக்கும் ரகசியத்தை முதல் முறையாக கூறியிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது,

பீஸ்ட் மால் செட் உருவான விதம்:

ஆரம்பத்தில் ஒரு மாலுக்கு நேரிலேயே சென்று படப்பிடிப்பு நடத்த முடிவு செய்தோம். ஆனால், கொரோனாவால் எங்களால் எடுக்கமுடியவில்லை. பின் ஜார்ஜியா சென்று எடுக்கலாம் என்று நினைத்தோம். நம்ம ஊரு ஆட்களை அங்கே கொண்டு போவதில் பல பிரச்சனைகள். பட்ஜெட், குழப்பம் அதிகம் ஏற்பட்டது. அதற்குப் பிறகு தான் மொத்த மால்லையும் செட் போட முடிவு செய்தோம். முதலில் ஒரு ப்ளோர் மட்டும் செட் போட பிளான் செய்தோம். அதற்கு பின்பு மொத்தமாய் போட்டோம். மால் செட் 60 அடிக்கு மேல் போடணும்ன்னா உட்புறம் வெளியே தனித்தனியாக போடுவோம். ஆனால், இந்த செட்டை மொத்தமாக போட்டோம். 5 மாதத்தில் முடிக்க பிளான் செய்தோம். ஆனால், கோரானா பிரச்சனை காரணமாக மூன்று மாதத்தில் இந்த மால் செட்டை போட்டு முடித்தோம் என்று கூறியிருக்கிறார்.

Advertisement