பிரஸ் மீட் வைத்து விஜய் கொடுத்த கிறிஸ்துமஸ் பரிசு..!அஜித்தை அடுத்து விஜயை கிண்டல் செய்த கஸ்தூரி..!

0
795
kasthuri

இளைய தளபதி விஜய் ‘சர்கார்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது அட்லீ இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இந்நிலையில் விஜய் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அளித்த பரிசை நடிகை கஸ்தூரி கிண்டலடித்துள்ளார்.

கடந்த சில காலமாகவே நடிகை கஸ்தூரி சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். சமீபத்தில் ட்விட்டர் பக்கத்தில் அஜித் பற்றி பேசிய கஸ்தூரி , அஜித்தின் ரசிகர்களிடம் நன்றாக வாங்கிகட்டிக்கொண்டார்.தற்போது கஸ்தூரியின் அடுத்த செயல் விஜய் ரசிகர்களையும் வம்பிற்கு இழுத்துள்ளது.

இதையும் படியுங்க : அஜித் பெயரை கெடுக்கிறது நானா? இல்லை அவரது ரசிகர்களா..!நடிகை கஸ்தூரி..!

- Advertisement -

நடிகர் விஜய் கிறிஸ்துமஸ் பண்டிகை என்றால் பிரஸ் மீட் வைத்து பரிசுகளை வழங்குவது வழக்கம். அந்த வகையில் நேற்று (டிசம்பர் 20) பிரெஸ் மீட் வைத்து அனைவருக்கும் தங்க நாணயம் ஒன்றை பரிசளித்தார்.

இந்நிலையில் அதனை கிண்டல் செய்யும் விதமாக நடிகை கஸ்தூரி, ஜோஸ் ஆலுக்காஸ் விளம்பரத்தில் நடித்துவிட்டு ஜோய் ஆலுக்காஸ்ஸில் நகை வாங்கியுள்ளாரே என்று ட்வீட் செய்துள்ளார். இது விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

-விளம்பரம்-
Advertisement