விஜய்யை கேலி செய்த ரஜினி ரசிகர்கள், ஜெயிலர் பட விஷயத்தில் விஜய் காட்டியுள்ள பெருந்தன்மையை பாருங்க.

0
1862
Vijay
- Advertisement -

சூப்பர் ஸ்டார் பட்டத்தை வைத்துக்கொண்டு ரஜினி ரசிகர்களும் விஜய் ரசிகர்களும் சமூக வலைத்தளத்தில் சண்டை போட்டு கொண்டு இருக்கும் நிலையில் ஜெயிலர் பட விஷயத்தில் விஜய் காட்டியுள்ள பெருந்தன்மை பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்றாலே அனைவரும் ரஜினிகாந்தை தான் சொல்வார்கள். ஆனால், சமீப காலமாகவே அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் என்று கூறி வருகிறார்கள். இதனால் சோசியல் மீடியாவில் இருதரப்பு ரசிகர்கள் மத்தியிலும் கலவரம் வெடித்து கொண்டிருக்கிறது.

-விளம்பரம்-

அதற்கேற்றார் போல் ஜெயிலர் படத்தின் பாடல்கள் சர்ச்சையை கிளப்பி இருந்தது. இந்த பாடல் வரிகள் மட்டும் விஜய்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் இருப்பதாக ரசிகர்கள் கூறி இருந்தனர். மேலும், ஜெயிலர் படத்தின் இசை வெளியிட்டு விழாவில் ரஜினிகாந்த் அவர்கள் விஜய் பீஸ்ட் படம் சரியாக போகவில்லை என்று பேசி இருந்தார். அதே போல ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி சொன்ன கழுகு காகா கதையும் விஜய்யை குறிப்பிட்டு சொன்னதாக விஜய் ரசிகர்கள் பலரும் ரஜினி மீது கடுப்பானார்கள்.

- Advertisement -

இதனால் ஜெயிலரை failure ஆகிகுவோம் என்று விஜய் ரசிகர்கள் சபதம் போட்டனர். அதே போல சூப்பர் ஸ்டார் படத்திற்கு விஜய் ரசிகர்கள் சொந்தம் கொண்டாடியதால் ரஜினி ரசிகர்களும் விஜய் மீது கடும் கோபம் அடைந்தனர். இதனால் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இருந்தே ரஜினி ரசிகர்கள் விஜயை ட்ரோல் செய்து வந்தனர். இப்படி ஒரு நிலையில் ஜெயிலர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதனால் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்த பீஸ்ட் படத்தை கலாய்த்து வருகின்றனர். இதற்கு விஜய் ரசிகர்களும் பதிலடி கொடுத்துள்ளனர். இப்படி ஒரு நிலையில் ஜெயிலர் படத்தை இயக்கிய நெல்சனுக்கு போன் செய்து வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளாராம். என்னதான் ரஜினி ரசிகர்கள் விஜய்யை விமர்சித்தாலும் ரஜினி படத்தை பாராட்டி தன்னுடைய பெருந்தன்மையை காட்டி இருக்கிறார் என்று விஜய் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

-விளம்பரம்-

ஏற்கனவே ஜெயிலர் படத்தில் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குனர் நெல்சன் ‘விஜய் சார் தான் ரஜினியை வைத்து படம் இயக்க வேண்டும் என்ற நம்பிக்கையை தனக்கு கொடுத்ததாக கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது’ தற்போது ஜெயிலர் படத்திற்காக இயக்குனர் நெல்சனை, நடிகர் விஜய் போன் செய்து பாராட்டி உள்ளது விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாது ரஜினி ரசிகர்களையும் நெகிழச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

இது ஒருபுறம் இருக்க தமிழ் நாட்டில் பீஸ்ட் திரைப்படத்தின் வசூலை முறியடிக்க ஜெயிலர் தவறியுள்ளது. பீஸ்ட் திரைப்படம் தமிழகத்தில் முதல் நாளில் 34 கோடி வசூலித்து இருந்தது. ஆனால், ஜெயிலர் திரைப்படம் 23 கோடி தான் வசூலித்து இருக்கிறது. ஆனால், வாரிசு படத்தின் இந்தியா மற்றும் தமிழ் நாடு வசூலை ஜெயிலர் திரைப்படம் முந்தியுள்ளது. வாரிசு திரைப்படம் முதல் நாளில் இந்திய அளவில் 26.5 கோடியும் தமிழ் நாடு அளவில் 17 கோடியும் வசூலித்து இருந்தது. ஆனால், ஜெயிலர் திரைப்படம் முதல் நாளில் இந்த அளவில் 52 கோடியும் தமிழக அளவில் 23 கோடியும் வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement