ட்விட்டரில் சாந்தனுவிற்கு வாழ்த்து சொன்ன விஜய் மகள் – நன்றி தெரிவித்த சாந்தனு.

0
51074
divya
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பல ஆண்டுகாலமாக உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே பிளாக் பஸ்டர் தான். இவருக்கு தமிழ்நாட்டில் மட்டும் இல்லாமல் உலக அளவில் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. பிகில் படத்தை தொடர்ந்து இளைய தளபதி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வரும் படம் “மாஸ்டர்” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

தளபதியும், மக்கள் செல்வனும் இந்த படத்தில் முதன் முறையாக இணைந்து நடிக்கிறார்கள். இந்த படத்தில் இவர்களுடன் மாளவிகா மோகனன், சாந்தனு பாக்யராஜ், ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா, கெளரி கிஷண், ப்ரிகிதா, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், ப்ரேம், ப்ரிகிதா, ஸ்ரீமன், பெருமாள், மேத்யூ ப்ரேம்,வி.ஜே.ரம்யா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

- Advertisement -

இளைய தளபதி விஜய் சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திருமணம் ஆகி 20 ஆண்டு காலமாக ஒரு ரொமான்டிக் ஜோடியாக ஒன்றாக வாழ்ந்து வருகின்றார்கள். இவர்களுக்கு சஞ்சய் என்ற மகனும், சாஷா என்ற மகளும் இருக்கிறார்கள். சினிமா துறையில் மாஸ் காட்டிக் கொண்டிருக்கும் தளபதி விஜய்யின் தீவிர ரசிகை தான் சங்கீதா. தளபதி விஜய் அவர்கள் மீது கொண்ட பற்றின் காரணமாக சங்கீதா நம்ம தளபதியை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு ஆகஸ்ட் 25ஆம் தேதி 1999 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.விஜய்யின் மகள் திவ்யா ஷாஷா தெறி திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் தோன்றி இருந்தார். மேலும், விஜய் மகள் திவ்யா வெளிநாட்டில் படித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிகர் சாந்தனுவிற்கு ட்விட்டரில் பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்துள்ளார். இதன் மூலம் தான் இவர் ட்விட்டரில் இருக்கிறார் என்றே தெரியவந்துள்ளது. மேலும், இவரது லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement