லைகர் படத்தை பார்த்து ரசிகர்கள் செய்த செயலால் கதறி அழுதாரா விஜய் தேவர் கொண்டா ?

0
402
vijaydevarakonda
- Advertisement -

லைகர் படத்தை திரையரங்கில் பார்த்துவிட்டு விஜய் தேவர் கொண்டா கதறி அழுது இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் விஜய் தேவர்கொண்டா. அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் தான் விஜய் தேவர்கொண்டா அவர்கள் தென்னிந்தியா முழுவதும் பிரபலமானார். இதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்தார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் ஹிட் அடித்து இருக்கிறது.

-விளம்பரம்-
liger

கடைசியாக இவர் வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது. தற்போது இவர் ஹீரோவாக மட்டும் நடித்து வராமல் தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். தற்போது இவர் நடிப்பில் லைகர் படம் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை இயக்குனர் பூரி ஜெகன்நாதன் இயக்கி இருக்கிறார். இந்த படம் குத்து சண்டை போட்டியை மையமாக கொண்டு உருவாகி இருக்கிறது.

- Advertisement -

லைகர் படம் :

இந்த படமானது தமிழ், தெலுங்கு, மலையாளம்,ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட 5 மொழிகளில் Pan இந்தியா படமாக வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தில் அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன் உட்பட பலர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள். பெரும் எதிர்பார்ப்புடன் இருந்த படம் வெளியாகிய அன்றைய நாளிலேயே பெரும் தோல்வியை சந்தித்தது.

விமர்சனம் செய்த ரசிகர்கள்:

படத்தை பார்த்த அனைத்துவித ரசிகர்களும் படத்தை கழுவி ஊற்றி விட்டனர். படத்தில் கதையே இல்லை எனவும் படம் படு மொக்கையாக இருக்கிறது எனவும் மோசமான விமர்சனங்களை கூறி வருகின்றனர். அதோடு படம் ரிலீஸ் செய்யப்பட்ட அனைத்து மொழிகளிலும் தோல்வியை சந்தித்து விட்டது. ஒரு மொழியில் கூட ரசிகர்களின் வரவேற்பை பெற தவறிவிட்டது லைகர் படம். இந்த படம் படுதோல்வி அடைந்ததை அடுத்து நெட்டிசன்கள் பலரும் விஜய் தேவர்கொண்டாவை பயங்கரமாக ட்ரோல் செய்து வருகின்றனர்.

-விளம்பரம்-

திரையரங்கில் நடந்த சம்பவம்:

அதுமட்டுமில்லாமல் விஜய் தேவர் கொண்டாவின் திரை வாழ்க்கையிலே இது ஒரு மோசமான படமாக அமைந்துள்ளது என்று பலரும் கூறி வருகின்றனர். இந்த நிலையில் இந்த படத்தால் விஜய் தேவர் கொண்டா பயங்கரமாக கதறி அழுதி இருக்கிறார் என்ற செய்தி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, ஹைதராபாத்தில் உள்ள சுதர்ஷன் சினிமா திரையரங்கில் லைகர் படத்தை காண விஜய் தேவர்கொண்டா சென்றிருக்கிறார். அங்கு படம் முடிந்து கடைசி நேரத்தில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இல்லாததை கண்டு மிகவும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார் விஜய் தேவர்கொண்டா.

கதறி அழுத விஜய் தேவர்கொண்டா:

அது மட்டும் இல்லாமல் மனமுடைந்த விஜய் தேவர் கொண்டா கதறி அழுது இருந்ததாக கூறப்படுகிறது. படத்தை பார்க்கும்போது உற்சாகமாக போன விஜய் தேவர்கொண்டா படம் முடிந்து வரும் போது கண்ணீருடன் வீடு திரும்பிருக்கிறார். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. மேலும், இந்த படத்தை தொடர்ந்து விஜய் தேவர்கொண்டா அவர்கள் குஷி என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக சமந்தா நடித்திருக்கிறார். இந்த படம் விஜய் தேவர் கொண்டாவுக்கு ஒரு திருப்புமுனையாக இருக்குமா? என்பதை பார்க்கலாம்.

Advertisement