இந்த படத்தையும் புறக்கணிக்க வேண்டும் – விஜய் தேவர்கொண்டாவின் செயலால் Boycott லிஸ்டில் சேர்ந்த ‘லைகர்’ திரைப்படம்.

0
490
vijaydevarakonda
- Advertisement -

அமீர்கானுக்கு சப்போர்ட் செய்ததால் விஜய் தேவர்கொண்டா படத்தின் வசூலில் சிக்கல் வந்துள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் விஜய் தேவர்கொண்டா. அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் தான் விஜய் தேவர்கொண்டா அவர்கள் தென்னிந்தியா முழுவதும் பிரபலமானார். இதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து இருக்கிறார். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ஹிட் அடித்து விடுகிறது.

-விளம்பரம்-

கடைசியாக இவர் வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது. தற்போது இவர் ஹீரோவாக மட்டும் நடித்து இல்லாமல் தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். தற்போது இவர் ‘liger’ என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தை இவரே தயாரித்தும் இருக்கிறார். இந்த படத்தை இயக்குனர் பூரி ஜெகன்நாதன் இயக்கி இருக்கிறார். இந்த படம் குத்து சண்டை போட்டியை மையமாகக் கொண்டு உருவாகி இருக்கிறது.

- Advertisement -

லைகர் படம்:

இந்த படமானது தமிழ், தெலுங்கு, மலையாளம்,ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட 5 மொழிகளில் வெளிவர இருக்கிறது. மேலும், இந்த படத்தில் பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன் உட்பட பலர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த படம் ஆகஸ்ட் மாதம் 25 ஆம் தேதி வெளிவர இருக்கிறது. தற்போது இந்த படத்தின் பிரமோஷன் பணிகளில் விஜய் தேவர்கொண்டாவும், அனன்யா பாண்டேவும் பிஸியாக ஈடுபட்டு வருகின்றனர்.

Boycott பிரச்சாரம்:

இந்தநிலையில் அமீர்கானுக்கு சப்போர்ட் செய்ததால் விஜய் தேவர்கொண்டா படம் பிரச்சனையில் சிக்கி உள்ள தகவல் தற்போது வைரலாகி வருகிறது. அதாவது, சமீபகாலகவே அடிக்கடி பாலிவுட் திரையுலகில் Boycott பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் வெளியான அமீர்கானின் ‘லால் சிங் சத்தா’ படத்தை புறக்கணிக்குமாறு பெரிய அளவில் பிரச்சாரம் நடந்தது. அதற்கு காரணம், 2015ஆம் ஆண்டு நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்து விட்டதாக அமீர்கான் தெரிவித்த கருத்துக்கு எதிராக அவருடைய ஒவ்வொரு படத்தின் ரிலீஸின்போது இந்த மாதிரி பிரச்சனைகள் வந்து கொண்டிருக்கின்றது.

-விளம்பரம்-

விஜய் தேவர்கொண்டா கூறிய கருத்து:

இப்போது அதிக அளவில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் அமீர்கானுக்கு ஆதரவாக விஜய் தேவர்கொண்டா வெளிப்படையாக கருத்து ஒன்றில் கூறியிருக்கிறார். அதில் அவர், உங்களின் பாய்காட் பிரச்சாரம் அமீர்கானை மட்டும் பாதிக்கவில்லை. படத்தில் வேலை செய்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வாழ்வாதாரத்தையும் சேர்த்து பாதித்திருக்கிறது. ஒரு படத்தில் நடிகர், இயக்குனர் மற்றும் நடிகை தவிர பல முக்கியமான கதாபாத்திரங்கள் இருப்பதாக நான் நினைக்கிறேன். 200,300 நடிகர்கள் வேலை செய்கிறார்கள். ஒரு திரைப்படம் என்பது பலருக்கும் வேலை வாய்ப்பையும், வாழ்வாதாரத்தையும் தருகிறது என்று தெரிவித்து இருந்தார்.

அச்சத்தில் படக்குழு:

இப்படி விஜய் தேவர்கொண்டா, அமீர்கானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததை அடுத்து அவருடைய நடிப்பில் ரிலீசாக இருக்கும் லைகர் திரைப்படத்தையும் புறக்கணிக்குமாறு #BoycottLigerMovie என்று ஹேஷ் டேக்குகளை போட்டு கண்டன குரல் கொடுத்து வருகின்றனர். மேலும், லைகர் படத்தின் மூலம்தான் பாலிவுட்டில் விஜய் தேவர் கொண்டா அறிமுகமாக இருக்கிறார். இந்த படத்தை கரண் ஜோகர் தயாரித்திருக்கிறார். இந்த நிலையில் விஜய் தேவர்கொண்டாவுக்கு எதிராக படத்தைப் புறக்கணிக்குமாறு கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் படத்தின் வசூல் பாதிக்கப்படும் என்று படக்குழுவினர் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது.

Advertisement