தமிழ் ராக்கர்ஸ்க்கு நன்றி தெரிவித்த நடிகர் விஜய் தேவர்கொண்டா..!

0
405

தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தவர் நடிகர் விஜய் தேவர்கொண்டா, அந்த படத்தை தொடர்ந்து ‘நோட்டா ‘ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிலும் கால் பதித்தார்.

Taxiwala

இவரது நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த ஹாரர், த்ரில் திரைப்படம் ‘டாக்ஸிவாலா’. ராகுல் சங்கிரிட்யான் இயக்கியுள்ள இப்படத்தை, ஃபன்னி வாஸ், வம்சி கிருஷ்ண ரெட்டி மற்றும் பிரமோத் ஆகியோர் இணைந்து தயாரித்திருந்தனர். இந்தப் படம் வெளியாகி தெலுங்கில் பெரும் வெற்றி பெற்றுள்ளது.

இப்படம் திரையரங்கில் வெளியாவதற்கு இரண்டு வாரங்கள் முன்பே இணையத்தில் வெளியிடப்பட்டது. இருந்தும், இது தேவரகொண்டாவின் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று தற்போது பாக்ஸ் ஆபிஸ் வசூலை அள்ளி வருகிறது. டாக்ஸிவாலா படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் கடந்த 23-ம் தேதி நடைபெற்றது.

அந்த விழாவில் பேசிய நடிகர் விஜய் தேவர்கொண்டா, என் படத்தை இணையத்தில் வெளியிட்ட பைரஸிகளிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ராக்கர்ஸ், ரூலர்ஸ், டாட் இன், டாட் காம் போன்ற அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.இத்தனை தடைகள் தாண்டியும் படம் வெற்றியடைந்து விட்டது என்று தமிழ் ராக்கர்ஸ்ஸை கிண்டலடித்துள்ளார்.