இதுவரை நான் விஜய்யோட ஒரு படம் கூட பார்த்ததில்லை..! பிரபல நடிகர் அதிரடி..! யார் தெரியுமா.?

0
876
vijay

தெலுங்கில் கடந்த ஆண்டு வெளியான “அர்ஜுன் ரெட்டி” என்ற படத்தின் மூலம் தென்னிந்திய சினிமா ரசிகர்கள் முழுவதும் பிரபலமடைந்தவர் நடிகர் விஜய் தேவர்கொண்டா. தெலுங்கில் 2011 ஆம் ஆண்டு வெளியான “நுவ்விலா” என்ற படத்தின் மூலம் அறிமுகமானாலும் இவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது “அர்ஜுன் ரெட்டி ” திரைப்படம் தான்.

vijay-deverakonda

இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான “கீதா கோவிந்தம்” திரைப்படமும் ரசிகர்கள்மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதிலும் அந்த படத்தில் இடம்பெற்றுள்ள “இன்கேம் இன்கேம் கவாளி” என்ற பாடல் தமிழ், தெலுகு ,மலையாளம் என அணைத்து ரசிகர்களையும் ஈர்த்திருந்தது.

இந்த படத்தை தொடர்ந்து தற்போது நடிகர் விஜய் தேவர்கொண்டா “நோட்டா “என்ற நேரடி தமிழ் படத்தில் நடித்து வருகிறார்.சமீபத்தில் தனியார் வலைதள சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த நடிகர் விஜய் தேவர்கொண்ட, நடிகர் விஜய் பற்றி பேசுகையில், விஜய் தன்னை திரையில் காண்பித்துக்கொள்ளும் விதம் எனக்கு மிகவும் பிடிக்கும். ஒரு சில நடிகர்கள் மட்டுமே தனித்துவமாக நடிக்க முடியும், உதாரணமாக ரஜினிகாந்தை சொல்லலாம்.

devarakongda

ரஜினியை பொறுத்த வரை அவரது ஸ்டைல் ஒன்றே போதும். அவரை போல தான் விஜய்யும். விஜய் படங்களின் சில காட்சிகளை மட்டும் நான் இணையத்தளத்தில் பார்த்துள்ளேன். அவரது படங்களை நான் பார்த்தது இல்லை. ஆனால், அவருடைய ட்ரைலர்கள் அனைத்தையும் நான் பார்த்திருக்கிறேன் அவருடைய ஸ்டைல் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ளார் நடிகர் விஜய் தேவர்கொண்டா.