தளபதி விஜய்க்கு , ஹரிஷ் கல்யாணிடம் மலேசிய ரசிகை கொடுத்த ‘மெர்சல்’ பரிசு !

0
1364
Vijay

கடந்த சனிக்கிழமை மலேசியாவில் தமிழ் திரையுலகின் நட்சத்திர களைவிழா நடைபெற்றது. இந்த கலைவிழாவில் அஜித், விஜய் ஆகியோர் கலந்துகொள்ளவில்லை இதனால் அவர்களை பார்க்க காத்திருந்த ரசிகர்கள் ஏமாந்து போனார்கள்.

இந்த நிகழ்ச்சியில் பிக் பாஸ் பிரபலம் ஹரீஷ் கல்யாண் கலந்துகொண்டார். தற்போது ஹரீஷ் கல்யாண் மற்றும் பிக் அப்பாஸ் புகழ் ரைசா ஆகியோர் ஜோடியாக ஒரு படம் நடித்து வருகின்றனர். பியார் பிரேமா காதல் என்ற இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி உள்ளது.

நட்சத்திர கலைவிழாவில் கலந்துகொண்ட ஹரீஷ் கல்யானிடம் மலேசிய விஜய் ரசிகை, தன் கையால் வரைந்த மெர்சல் விஜய் ஓவியத்தை பரிசாக அளித்துள்ளார். இதனை தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ஹரீஷ்.

‘அண்ணா, இத விஜய் அண்ணா கிட்ட குடுத்துருங்க, உங்களையும் எனக்கு ரோமவ பிடிக்கும்’ என அந்த விஜய் ரசிகை கூறியதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் ஹரீஷ்.