வீட்ல கூட மேக்கப்பா. தளபதிய பாருங்க மேக்கப் இல்லாம எப்படி இருக்காரு. ரசிகரின் கமன்டிற்கு மாளவிகா பதில பாருங்க.

0
27468
malavika
- Advertisement -

இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ‘பேட்ட’ படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றது. இந்த படத்தில் ரஜினியுடன் விஜய் சேதுபதி, பாபிசிம்ஹா, சசிகுமார், குரு சோமசுந்தரம், நவாசுதின் சித்திக், மகேந்திரன் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்தில் கதாநாயகிகளாக திரிஷா, சிம்ரன், மேகா ஆகாஷ் ஆகியோரோடு மாளவிகா மோகனனும், சசி குமாரின் ஜோடியாக நடித்திருந்தார். தமிழில் அறிமுகமாகும் இவர் முதல் படத்திலேயே ரஜினியுடன் களம்இறங்கினர்.

-விளம்பரம்-

இந்த படத்தில் சசி குமாரின் மனைவியாக குடும்ப குத்துவிளக்காக நடித்திருந்தார் மாளவிகா. தற்போது நடித்து வரும் மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். எப்போதும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன் அடிக்கடி போட்டோ ஷூட்களை நடத்தி அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பதிவிடுவார்.சமீபத்தில் இவர் விஜய்யுடன் வீடியோ காலில் பேசி இருந்தது பெரும் வைரலாக பேசபட்டது.

- Advertisement -

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு வாட்டி வதைத்து வருகிறது. தற்போதைக்கு இந்த நோயின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க இந்தியா முழுவது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உந்த ஊரடங்கு உத்தரவால் பலரும் வீட்டைவிட்டு வெளி வர முடியாமல் இருக்கின்றனர். மீறி வந்தால் அவர்களை போலீசார் வெளுத்து வாங்கி விடுகிறார்கள். பல்வேறு பிரபலங்களும் வீட்டில் இருந்தபடி எப்படி பொழுதை கழிப்பது என்று பல்வேறு வீடியோகளை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் மாஸ்டர் பட நடிகை மாளவிகா மோகனன் சமீபத்தில் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம் ஒன்று காட்டுத்தீ போல பரவி வருகிறது.. அது என்னவேனில் மாஸ்டர் பட இசைசையமைப்பாளர் அனிருத், இணை தயாரிப்பாளர் ஜெகதீஷ், மாளவிகா ஆகியோர் வீடியோ கால் பேசியுள்ளனர். மேலும், இந்த வீடியோ காலில் தளபதி விஜய்யும் இணைந்துள்ளார்.

-விளம்பரம்-

இவர்கள் நால்வரும் வீடியோ காலில் இணைந்து இருந்த போது அதனை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து அதனை வெளியிட்டுள்ளார் மாளவிகா மோகனன். இதனை கண்ட ரசிகர் ஒருவர் மாளவிகா, வீட்டிலேயும் மேக்கப் இல்லாமல் இருக்க மாட்டாங்க(பொண்ணுங்க) போல தளபதி விஜய பாருங்க அந்த முகத்தை எவ்வளவு கூலா இருக்கார்னு மேக்கப் இல்லாம என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதிலளித்த மாளவிகா,ஏய் என்னுடைய முகத்தில் என்ன மேக்கப் இருக்கிறதை நீ பார்த்த? சும்மா வாய்க்கு வந்த மாதிரி பேசி பெண்களை வெறுக்காதே. மேக்கப்பும் கிடையாது, நேச்சுரல் அழகுடா என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement