திடீர் ரத்தான லியோ படத்தின் ஆடியோ லான்ச் – தி.மு.கவிற்கு எதிராக ஹேஷ் டேக்கை ட்ரெண்ட் செய்யும் விஜய் ரசிகர்கள்.

0
2090
- Advertisement -

லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்தானதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது திமுகவிற்கு எதிராக விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் ஹேஷ் டேக்குகளை ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர். மாஸ்டர் படத்தின் வெற்றிக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் லியோ படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன், மேத்திவ் தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து வருகின்றனர். இந்த படம் அதிரடி ஆக்சன் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்து இருக்கிறது. இந்த படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

-விளம்பரம்-

இதனால் படத்தினுடைய ப்ரமோஷன் பணிகள், போஸ்டர் பணிகள் எல்லாம் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க, விஜய் படம் என்றாலே பலரும் எதிர்பார்ப்பது அவருடைய இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியை தான். அதிலும் நிகழ்ச்சியில் அவர் சொல்லும் குட்டிக்கதை ரசிகர்களுக்கு அதிக ஆர்வத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா எங்கே? என்றுதான் சமீப காலமாகவே ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

- Advertisement -

இந்த நிலையில் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி லியோ படத்தில் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெறுவதாக தகவல் வெளியாகி இருந்தது. மேலும், இசை வெளியீட்டு விழாவிற்கான பாஸ்கள் கூட தயாராகி இருந்தது. மேலும், விழா நடைபெறுவதர்க்காக மேடை எல்லாம் கூட போடப்பட்டது. இது தொடர்பான புகைப்படங்கள் கூட சமூக வலைதளத்தில் வைரலானது.

இப்படி ஒரு நிலையில் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறாது என்று லியோ படத்தின் தயாரிப்பு நிறுவனம் நேற்று அறிவித்து இருந்தது. இதுகுறித்து வெளியிடபட்ட அறிவிப்பில் ‘பாஸ்கள் கேட்டு அதிகப்படியான கோரிக்கைகள் வருவதாலும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் `லியோ’ ஆடியோ வெளியீட்டு விழாவை நடத்த வேண்டாம் என முடிவெடுத்திருக்கிறோம். பலர் நினைப்பது போல இதில் அரசியல் அழுத்தங்களோ மற்ற காரணங்களோ கிடையாது’ என்றும் கூறி இருந்தது.

-விளம்பரம்-

லியோ பட குழுவில் இந்த முடிவைக் கேட்டு விஜய் ரசிகர்கள் பலரும் பெருத்த ஏமாற்றம் அடைந்தனர். அதே சமயம் சமீபத்தில் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் நடத்திய மறக்கமா நெஞ்சம் இசை நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட சர்ச்சைகளை மனதில் வைத்து இந்த முடிவை எடுத்ததாக ஒரு சிலர் கூறி வந்தாலும் சவுக்கு சங்கர் கூறியது போலவே உதயநிதியின் அழுத்தத்தால் தான் இந்த முடிவை லியோ பட குழு எடுத்ததாக மேலும் சிலர் கூறி வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் பேசிய சவுக்கு சங்கர் ‘விஜயின் நடிப்பில் உருவாகி இருக்கும் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு அனுமதி கிடைக்கவில்லை.இதனால் சென்னை, செங்கல்பட்டு, வடக்கு ஆற்காடு, தெற்கு ஆற்காடு ஆகிய பகுதிகளின் விநியோக உரிமைகளை உதயநிதி நடத்திவரும் ரெட் சயின்ஸ் மூவி நிறுவனத்திற்கு தந்தால் மட்டுமே இசை வெளியீடு விழாவிற்கு அனுமதி அளிப்போம் என்று திமுக சொல்கிறது என்று கூறி இருந்தார்.

அவர் சொன்னதை போலவே தற்போது லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்தாகி இருக்கிறது. என்னதான் லியோ படத்தின் தயாரிப்பாளர் ‘இதில் அரசியல் அழுத்தங்களோ மற்ற காரணங்களோ கிடையாது’ என்று கூறினாலும் இதற்கு காரணம் தி.மு.க தான் என்று விஜய் ரசிகர்கள் பலர் கூறி வருகின்றனர். இதனால் விஜய்யாக இருப்பது சுலபமல்ல என்று ட்விட்டரில் விஜய் ரசிகர்கள் ட்வீட் போட்டு வருவதோடு ‘WeStandWithLEO #DMKFearsThalapathyVIJAY, #LeoAudioLaunchUpdate’ போன்ற ஹேஷ் டேக்கை ட்ரெண்டிங்கில் கொண்டு வந்துள்ளனர்.

Advertisement