மாஸ்டர் படத்தின் வெற்றிக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் லியோ படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன், மேத்திவ் தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து வருகின்றனர். இந்த படம் அதிரடி ஆக்சன் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்து இருக்கிறது. இந்த படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
அவோலு ஈஸி இல்ல @ActorVijay அண்ணனோட இடம். 😭❤️!#DMKFearsThalapathyVIJAY#WeStandWithLEOpic.twitter.com/9iEkoO6kdL
— Vɪᴊᴀʏ Rᴀꜱʜᴇᴇᴅ vfc 🔥ᴸ ᴱ ᴼ (@vijay_mohammed) September 26, 2023
இதனால் படத்தினுடைய ப்ரமோஷன் பணிகள், போஸ்டர் பணிகள் எல்லாம் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க, விஜய் படம் என்றாலே பலரும் எதிர்பார்ப்பது அவருடைய இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியை தான். அதிலும் நிகழ்ச்சியில் அவர் சொல்லும் குட்டிக்கதை ரசிகர்களுக்கு அதிக ஆர்வத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா எங்கே? என்றுதான் சமீப காலமாகவே ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி லியோ படத்தில் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெறுவதாக தகவல் வெளியாகி இருந்தது. மேலும், இசை வெளியீட்டு விழாவிற்கான பாஸ்கள் கூட தயாராகி இருந்தது. மேலும், விழா நடைபெறுவதர்க்காக மேடை எல்லாம் கூட போடப்பட்டது. இது தொடர்பான புகைப்படங்கள் கூட சமூக வலைதளத்தில் வைரலானது.
இப்படி ஒரு நிலையில் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறாது என்று லியோ படத்தின் தயாரிப்பு நிறுவனம் நேற்று அறிவித்து இருந்தது. இதுகுறித்து வெளியிடபட்ட அறிவிப்பில் ‘பாஸ்கள் கேட்டு அதிகப்படியான கோரிக்கைகள் வருவதாலும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் `லியோ’ ஆடியோ வெளியீட்டு விழாவை நடத்த வேண்டாம் என முடிவெடுத்திருக்கிறோம். பலர் நினைப்பது போல இதில் அரசியல் அழுத்தங்களோ மற்ற காரணங்களோ கிடையாது’ என்றும் கூறி இருந்தது.
லியோ பட குழுவில் இந்த முடிவைக் கேட்டு விஜய் ரசிகர்கள் பலரும் பெருத்த ஏமாற்றம் அடைந்தனர். அதே சமயம் சமீபத்தில் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் நடத்திய மறக்கமா நெஞ்சம் இசை நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட சர்ச்சைகளை மனதில் வைத்து இந்த முடிவை எடுத்ததாக ஒரு சிலர் கூறி வந்தாலும் சவுக்கு சங்கர் கூறியது போலவே உதயநிதியின் அழுத்தத்தால் தான் இந்த முடிவை லியோ பட குழு எடுத்ததாக மேலும் சிலர் கூறி வருகின்றனர்.
இப்படி ஒரு நிலையில் இதுகுறித்து பேசியுள்ள சீமான் ‘தம்பி விஜயின் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு அனுமதி கொடுக்கல காரணம் கேட்டா கூட்டல் நெரிசல் வரும் பிரச்சனை வரும்னு சொல்றாங்க அதோட ஏ.ஆர். ரகுமான் இசை கச்சேரியின் போது பல பிரச்சினை நடந்துச்சு அதனால்தான் அனுமதி தரவில்லை என்றார்கள் இது முழுக்க முழுக்க அரசு இதுக்கும் இந்த பிரச்சனைக்கும் ஏ ஆர் ரகுமானுக்கும் சம்பந்தமே இல்ல.
இது முழுக்க முழுக்க அரசும் காவல்துறையும் தான் காரணம் அனுமதி கொடுக்கும்போதே காவல்துறை இங்கு இவ்வளவு பேர் தான் இருக்கணும் இங்கு இவ்வளவு பேர் தான் வண்டி நிறுத்த முடியும் என்று முறையாக ஆய்வு செய்து அதற்கு பிறகு அனுமதி தர வேண்டும் எதையும் செய்யாமல் கொடுத்துவிட்டு ஏ ஆர் ரகுமானின் மீது குறை சொல்வது சரியா இல்லாதது ஒன்று. அதேபோல் இதற்கு முன்னாடி நிறைய வரை நிறைய தடவை விஜயின் படத்திற்கு நேரு உள் விளையாட்டு அரங்கத்திற்கு அரங்கத்தில் அனுமதி தந்திருந்தார்கள்.
Event though !!!! @actorvijay#DMKFearsThalapathyVIJAY#WeStandWithLEO pic.twitter.com/uhg8tcd9T2
— MERSAL MADHAN (@mersalmadhan06) September 27, 2023
ஆனால் இந்த முறை ஏன் தரவில்லை? நீங்கள் நடத்தும் மாநாட்டிற்கு இலட்சக்கணக்கான மக்கள் வரலாம் அதற்காக பாதுகாப்பு அளிப்பீர்கள். ஆனால் விஜயின் இசை வெளியீட்டு விழாவிற்கு இவ்வளவு பேர் தான் வர முடியும் எங்களால் பாதுகாப்பு கொடுக்க முடியாது என்பது சொல்வது சரியா அதற்கு எதற்கு அரசாங்கமும் காவல்துறையும் என்று சராமாரியாக கேள்வி எழுப்பி பேசி இருக்கிறார்.