விஜய் நடித்துள்ள மெர்சல் திரைப்படத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியது சென்னை உயர்நீதிமன்றம்.
விஜய்–அட்லீ கூட்டணியில் உருவாகி வரும் தீபாவளிக்கு வெளியாக இருந்த படம் மெர்சல்.இந்தப்படம் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸின் 100-வது படம். விஜய் மூன்று வேடங்களில் நடித்துள்ளளார். தீபாவளிக்கு இந்த படம் வெளியாகயிருப்பதால் தற்போது இறுதிகட்ட பணிகள் முடிந்துவிட்டது.
மெர்சல் படத்தின் டீசர் வெளியாகி, உலகசாதனை நிகழ்த்தியது.இந்த நேரத்தில் தயாரிப்பாளர் ராஜேந்திரன் என்பவர், ஏற்கனவே தான் மெர்சலாயிட்டேன் என்ற பெயரில் ஒரு தலைப்பை 2014-லேயே பதிவு செய்திருப்பதோடு, அந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வருவதாக கூறியதுடன், மெர்சல் தலைப்புக்கு தடைகோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
அதை விசாரித்த நீதிபதி (அக்டோபர் 3-ந்தேதி) விளம்பரங்களில் மெர்சல் என்ற தலைப்பை பயன்படுத்த தடை விதித்திருந்ததோடு ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸை பதிலளிக்கவும் உத்தரவிட்டிருந்தார்.
இதையும் படிங்க: மெர்சல் – கொண்டாட்டத்தை துவங்கிய விஜய் ரசிகர்கள்
இந்நிலையில் இன்று மெர்சல் – மெர்சலாயிட்டேன் என்ற பெயருக்கும் வித்தியாசம் உள்ளதாகவும், மெர்சல் படத்திற்கு டிரேடு மார்க் வாங்கியுள்ளதாகவும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தெரிவித்தது. இதனைடுயத்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
இதனால் தீபாவளிக்கு மெர்சல் டைட்டிலுடன் படம் வெளிவரவுள்ளது.
ரசிகர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.