ஆஸ்கார் விருது வென்ற படம் விஜய்யின் இந்த படத்தின் காப்பியா.

0
32102
Vijay
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முடிசூடா மன்னனாக திகழ்ந்து கொண்டு இருப்பவர் நடிகர் விஜய். நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் சூப்பர் ஹிட் கொடுத்து உள்ளது. இந்நிலையில் சில வருடங்களுக்கு முன் விஜய் நடிப்பில் வெளிவந்த மின்சார கண்ணா படத்தின் கதை தழுவலில் கொரியாவில் பாராசைட் என்ற திரைப்படம் வெளிவந்தது. தற்போது இந்த படம் 4 ஆஸ்கர் விருதுகளை குவித்துள்ளது. 1999ஆம் ஆண்டு கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த படம் மின்சார கண்ணா. இந்த படத்தில் விஜய், குஷ்பூ, ரம்பா, மோனிகா, மணிவண்ணன், மன்சூர் அலிகான், மனோபாலா உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

-விளம்பரம்-

உலக சினிமாவில் முக்கிய நிகழ்வாக கருதப்படுவது ஆஸ்கர் விருது தான். இன்று இந்த ஆஸ்கார் விருது விருது கோலாகலமாக அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி திரையரங்கில் வெகுவிமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவில் தென் கொரியாவின் படமான பாராசைட் 4 ஆஸ்கர் விருதுகளை வென்று பட்டையை கிளப்பி இருக்கிறது. சிறந்த திரைக்கதை, சிறந்த வெளிநாட்டு படம், சிறந்த இயக்குனர், சிறந்த படம் என்ற நான்கு பிரிவுகளில் விருதுகள் இப்படம் குவித்து இருக்கிறது.

- Advertisement -

இதையும் பாருங்க : இவளுக்கு எதுக்கு அவார்ட்? சொல்லி வைத்தது போல லாஸ்லியாவை ஒரே மாதிரி கழுவி ஊற்றும் ரசிகர்கள்.

மேலும், விஜய் நடிப்பில் வெளியான மின்சார கண்ணா படத்தை போல் பாராசைட் படம் இருப்பதாக விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். மின்சார கண்ணா படத்தில் மிகப்பெரிய தொழிலதிபராக குஷ்பு நடித்திருப்பார். குஷ்பு வீட்டில் தனி ஆளாக வேலைக்கு மிகப்பெரிய பணக்கார வீட்டு பையன் விஜய் சேர்வார். பின் குஷ்பு வீட்டில் ஒவ்வொரு பணியாட்கள் ஆக தன்னுடைய குடும்பத்தையே சேர்ப்பார். இப்படி தன்னுடைய காதலுக்காக மொத்த குடும்பத்தையும் தன் காதலியின் வீட்டில் வேலைக்காரர்களாக சேர்க்கும் கதை தான் இந்த படம். அப்போது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது 4 ஆஸ்கர் விருதுகளை குவித்த படமும் இதே கதையில் தான் படமாக்கப்பட்டுள்ளது.

-விளம்பரம்-

அதே போல் ஏழ்மை வர்த்தகத்தை சேர்ந்த குடும்பம் ஒன்று போலி ஆவணங்களை தயாரித்து பணக்கார குடும்பம் ஒன்றில் ஒற்றுமையாக சேர்ந்து ஏழ்மையில் இருந்து விடுபட நினைப்பதே பாராசைட் படம். இதில் தென் கொரியா மற்றும் வட கொரியாவுக்கு இடையிலான சண்டை சச்சரவுகள், அதிபர் கிம்மின் அணுஆயுத கொள்கை உள்ளிட்டவை எல்லாம் பேசப்பட்டுள்ளது. படத்தின் முதல் பாதி முழுக்க முழுக்க விஜய்யின் மின்சார கண்ணா படம் போன்றதாகவே உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், இந்த படம் தற்போது 4 ஆஸ்கர் விருதுகளை பெற்றிருக்கிறது. இதனால் விஜய் ரசிகர்கள் பெருமிதமாக கூறிவருகின்றனர். எங்க தளபதி எங்க போனாலும் வெற்றி தான் என்றும் கூறுகின்றார்கள். ஆனால், என்ன ஒரு வருத்தமான செய்தி என்றால் மின்சார கண்ணா படத்திற்கு ஒரு விருது கூட கிடைக்கவில்லை என்பது தான் கொஞ்சம் வருத்தம் என்று கூறுகிறார்கள். விஜயின் மின்சார கண்ணா படத்தின் மூலம் இன்ஸ்பயர் ஆகி தான் பாராசைட் படம் எடுக்கப்பட்டது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement