கேரளா விஜய்யின் கோட்டை தான்.! மீண்டும் நிரூபித்த சேட்டாக்கள்.! என்ன செய்தாங்கனு பாருங்க.!

0
938
Vijay-63
- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வரும் நடிகர் விஜய்க்கு தமிழில் மட்டுமல்ல மற்ற மொழிகளிலும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர். விஜய் படங்கள் தமிழ் மொழியில் வெளியாவது போலவே மற்ற மொழிகளிலும் வெளியாகி வருகிறது.

-விளம்பரம்-

தமிழ் நாட்டிற்கு அடுத்தபடியாக நடிகர் விஜய்க்கு கேரளாவில் தான் அதிகப்படியான ரசிகர்கள் உள்ளனர். அதனால் கேரள மக்களுக்கும் விஜய்க்கும் எப்போதும் இணைபிரியா ஒரு பந்தம் இருந்து வருகிறார். சமீபத்தில் கேரளாவில் உள்ள ஒரு பகுதிக்கு இளைய தளபதி விஜய் என்றும் பெயர் வைத்திருந்தனர் கேரள பகுதி மக்கள்.

இதையும் படியுங்க : விஜய் தான் டாப்..! கேரளாவில் மீண்டும் நிரூபித்த தளபதி..! எட்ட முடியாத உச்சத்தில் விஜய்.!

- Advertisement -

சொல்லப்போனால் மலையாள நடிகர்களை விட கேரளாவில் விஜய்க்கு ரசிகர்கள் அதிகம். விஜயின் படங்கள் வெளியானால் அங்கு அவர்களுக்கு ஒரு கொண்டாட்டம்தான். சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘சர்க்கார்’ படத்திற்கு கூட தமிழகத்தில் இல்லாத அளவிற்கு அங்கே மிகப்பெரிய பேனர் மற்றும் கட்டடவுட்டுகளை வைத்தனர் கேரளா விஜய் ரசிகர்கள்.

சமீபத்தில் கேரளாவில் உள்ள ஒரு பேருந்து முழுக்க விஜய் நடித்த சர்க்கார் படத்தில் புகைப்படங்களை வரைந்து உள்ளனர். இந்த கலக்கலான பேருந்தில் புகைப்படம் சமீபத்தில் வெளியாக விஜய் ரசிகர்கள் அதனை அதிகம் பகிர்ந்து வருகின்றனர். இதன் மூலம் நடிகர் விஜய்க்கு கேரளாவில் எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று நம்மால் உணர முடிகிறது.

-விளம்பரம்-
Advertisement