என்னது இல்லையா ? சட்டையை கழட்டி சாலை மறியலில் ஈடுட்ட விஜய் ரசிகர்கள் – ஆட்டோவில் தூக்கி போட்டு ஸ்டேஷன்க்கு அழைத்து சென்ற போலீசார்.

0
505
- Advertisement -

விஜய் ரசிகர்கள் சாலையின் நடுவே போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தற்போது சோசியல் மீடியா முழுவதும் லியோ படம் குறித்த அப்டேட்டுகள் தான் வைரலாகி கொண்டு வருகிறது. மாஸ்டர் படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் லியோ படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன் தாஸ், தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து இருக்கின்றார்கள். இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது.

-விளம்பரம்-

இந்த படம் அதிரடி ஆக்சன் படமாக உருவாகி இருக்கிறது. மேலும், அனைவரும் எதிர்பார்த்த லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா மக்களின் பாதுகாப்பு காரணங்களுக்காக நடத்த வேண்டாம் என படக்குழு முடிவெடுத்திருந்ததாக கூறப்பட்டது. இதனால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். இருந்தாலும், லியோ ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருந்தது. அது மட்டும் இல்லாமல் அனைத்து திரையரங்களிலும் காலை 9 மணி முதல் நள்ளிரவு 1.30 மணி வரை மட்டுமே காட்சிகள் திரையிடப்படும் என்று அறிவித்திருக்கிறது.

- Advertisement -

லியோ படம்:

ஆனால், லியோ படத்திற்கு ஸ்பெசல் ஷோ அனுமதிக்கப்பட வேண்டும் என்று படக்குழு சார்பாக நீதிமன்றத்தில் கோரிக்கை மனு வைக்கப்பட்டு இருக்கிறது. இருந்தாலும், 4 மணி மற்றும் 7 மணி காட்சிகளுக்கு அனுமதி இல்லை என்றும் ஒரு நாளைக்கு ஐந்து காட்சிகளுக்கு மேல் திரையிடக்கூடாது என்றும் உத்தரவு போட்டிருந்தார்கள். மேலும், இன்று அனைவரும் எதிர்பார்த்த லியோ படம் பிரம்மாண்டமாக வெளியாகி இருக்கிறது.

படம் குறித்த தகவல்:

தமிழகத்தில் மட்டும் 9 மணிக்கு வெளியாகி இருக்கிறது. பிற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் 4 மணி மற்றும் 5 மணிக்கு திரைப்படம் வெளியாகி இருக்கிறது. ரசிகர்கள் மத்தியில் லியோ படம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. அது மட்டும் இல்லாமல் முதல் பாதியே தூள் கிளப்புகிறது என்றும் அடுத்த பாதையெல்லாம் வேற லெவல் என்றும் ரசிகர்கள் ட்விட்டர் தளத்தில் தெறிக்க விட்டு வருகின்றனர். தற்போது சோசியல் மீடியா முழுவதும் லியோ படம் குறித்த செய்திகள் தான் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

-விளம்பரம்-

மேலும், தமிழ்நாட்டின் பல இடங்களில் பல திரையரங்களில் காலை 9 மணிக்கு தான் லியோ முதல் காட்சியை வெளியாகியிருந்தது. ஆனால், பல முக்கிய தினங்களில் காலை 9 மணிக்கும் லியோ படம் வெளியாகவில்லை. குறிப்பாக, சென்னையின் கோட்டையாக கருதப்படும் ரோகிணி திரையரங்களில் 9:00 மணி காட்சி திரையிடப்படவில்லை. ஏற்கனவே விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும் இடையே ஷேர் பிரச்சனை இருப்பதால் முன்பதிவு டிக்கெட் கூட தொடங்குவது பிரச்சனை ஏற்பட்டிருந்தது.

கைது செய்த போலீசார் :

ஒருவழியாக பிரச்சனை தீர்ந்து படம் வெளியாகும் என்று ரோகினி திரையரங்கம் அறிவித்தது. இதனால் ரோகிணி திரையரங்கில் காலையிலேயே விஜய் ரசிகர்கள் திரண்டு லியோ படத்தை கொண்டாட காத்துக்கொண்டிருந்தார்கள். ஆனால், காவல்துறையினர் திரையரங்கம் முன்பு எந்த மாதிரி கொண்டாட்டமும் இருக்கக்கூடாது என்று கட்டுப்பாடு போட்டு இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் படம் 11 மணிக்கு தான் வெளியாகும் என்பதால் ரசிகர்கள் யாரும் உள்ளே வர அனுமதியில்லை என்று கூறி இருந்தர்கள். இதனால் ரசிகர்கள் கொந்தளித்து சாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள். இதனால் ரசிகர்களையும் போலீசார் கைது செய்து இருக்கிறார்கள். அதோடு ரோகிணி திரையரங்கில் விஜயின் படத்திற்கு ரசிகர்கள் எந்தவித கொண்டாட்டமும் இல்லாமல் இருப்பது இதுவே முதல் முறை .

Advertisement