ஒரு நாள் ரெண்டு நாள் இல்ல, தொடர்ந்து 266 நாட்களாக மக்களுக்கு விஜய் ரசிகர்கள் செய்து வரும் உதவி. என்ன தெரியுமா ?

0
867
Vijay

தமிழ் சினிமா உலகில் முடிசூடா மன்னனாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவருக்கு தமிழகத்தில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளார்கள். இவருடைய பெயரில் நிறைய ரசிகர் மன்றமும் உள்ளது. நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டிருப்பதால் ஆங்காங்கே விஜய் ரசிகர் நற்பணி மன்றங்கள் மூலம் விஜய் ரசிகர்கள் மக்களுக்கு உதவி செய்து வருகிறார்கள். கடந்த வாரம் இவரின் பிறந்த நாளன்று கூட நற்பணி மன்றங்கள் மூலம் பல மக்களுக்கு உதவி செய்து இருந்தார்கள் ரசிகர்கள். இது அனைவருக்கும் தெரிந்ததே.

Image

இந்த நிலையில் தளபதி விஜய் விலையில்லா விருந்தகம் என்ற பெயரில் தஞ்சாவூரில் விஜய் ரசிகர் ஒருவர் நடத்தி வருகிறார். அந்த படத்தின் புகைப்படம் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தளபதி விஜயின் பிறந்தநாள் ஜூன் 22 ஆம் தேதி சிறப்பாக முடிவடைந்தது. பொதுவாகவே விஜய்யின் பிறந்த நாள் என்றால் தமிழகமே கோலாகலமாக இருக்கும். ஆனால், இந்த முறை கொரானாவின் அச்சுறுத்தலால் தன்னுடைய பிறந்தநாளை வேண்டாம் என்று விஜய் ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்ததார்.

இதையும் பாருங்க : திருமணத்திற்கு முன்பு லைவ் வீடியோ வெளியிட்ட வனிதா – யாரும் இப்படி பண்ணது இல்ல.

- Advertisement -

இதை ரசிகர்களும் ஏற்று நடந்தார்கள். இருந்தாலும் சோசியல் மீடியாவில் தளபதி விஜய்க்காக புதிய போஸ்டர்களை உருவாக்கி பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் விஜய் பிறந்த நாளை கொண்டாடி வந்தார்கள். இந்த நிலையில் தளபதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு சக்கரவர்த்தி அவர்கள் தஞ்சாவூரில் விஜய் விலையில்லா விருந்தகம் ஒன்றை ஆரம்பித்துள்ளார். அது இன்றோடு 266 நாள் ஆகி உள்ளது. தற்போது அந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Image

இதை விஜய் ரசிகர்கள் ட்ரெண்டிங் செய்து வருகிறார்கள். மேலும், பிகில் படத்தை தொடர்ந்து தளபதி விஜய் அவர்கள் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற படத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்து உள்ளார். மாஸ்டர் படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

-விளம்பரம்-
Advertisement