திருமணத்திற்கு முன்பு லைவ் வீடியோ வெளியிட்ட வனிதா – யாரும் இப்படி பண்ணது இல்ல.

0
4524
- Advertisement -

பிக் பாஸ் வனிதாவுக்கும் பீட்டர் பவுல் என்பவருக்கும் இன்று (ஜூன் 27) திருமணம் என்ற செய்தி தான் கடந்த சில நாட்களாக வனிதாவின் ரசிகர்களால் மிகவும் பரவலாக பேசப்பட்டு வரும் விஷயமாக இருந்து வருகிறது. பிரபல ஸ்டார் தம்பதிகளாக விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மகளான வனிதா, விஜய் நடித்த சந்திரலேகா படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் ஒரு சில படங்களில் இவர் நடித்தாலும் இவருக்கும் மிகப்பெரிய புகழ் கிடைத்தது என்னவோ பிக் பாஸ் நிகழ்ச்சி தான்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னதாக வனிதாவின் குடும்ப பிரச்சனை அனைவரும் அறிந்த ஒரு விஷயம் தான், மேலும், வனிதாவிற்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி அது இரண்டுமே விவாகரத்தில் முடிந்துவிட்டது. மேலும் இவருக்கு இரண்டுபெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் இருக்கிறார்கள். ஆனால், இவரது மகன் மட்டும் இவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

- Advertisement -

இந்த நிலையில் வனிதா, பீட்டர் பவுல் என்பவரை விரைவில் திருமணம் செய்துகொள்ள போகிறார் என்ற செய்தியை வனிதா உறுதி செய்து இருந்தார்,. இந்த நிலையில் தனது திருமணம் குறித்து நேற்று வனிதா தனது யூடுயூப் சேனலில் லைவ் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் தனது வருங்கால கணவர் பீட்டர் பவுல் குறித்தும் தனது திருமண திட்டங்கள் குறித்தும் பேசி இருந்தார் வனிதா.

மேலும், இன்று திருமணத்தை வைத்துக்கொண்டு சற்று முன்னர் தனது யூடு யூப் சேனலில் வனிதா லைவ் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் தனது திருமணத்திற்கான மேக்கப்பை தானே போட்டு அசத்தியுள்ளார் வனிதா. மேலும், இன்று மாலை நடக்கவுள்ள இவரது திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

-விளம்பரம்-
Advertisement