சமீப காலமாகவே பாலிவுட்டில் பல்வேறு தமிழ் திரைப்படங்கள் ரீமேக்காகி வருகிறது தமிழில் முன்னணி நடிகர்கள் நடித்த படங்களை இந்தியில் ரீமேக் செய்து வருகின்றனர். ஆனால், தமிழில் இருந்து ரீமேக் செய்யப்படும் படங்கள் பாலிவுட் ரசிகர்களுக்கு ஏற்றவாறு சில மாற்றங்களும் செய்யப்பட்டு தான் வெளியாகி வருகிறது. இப்படி ஒரு நிலையில் விஜயின் சூப்பர் ஹிட் படமான மாஸ்டர் திரைப் படத்தின் இந்தி ரீமேக்கில் நடிப்பதாக இருந்த சல்மான்கான் அந்த முடிவில் இருந்து பின் வாங்கியதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்தது பிரச்சனை காரணமாக திரை அரங்குகளில் 50 சதவீத இரு கைகளுடன் படம் திரையிடப்பட்ட போதிலும் இந்த திரைப்படம் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது இந்த படத்தில் நடிகர் விஜய் ஒரு கல்லூரிப் பேராசிரியராக நடித்திருந்தார் அதேபோல குடிக்கு அடிமையாகி அதிலிருந்து மீண்டு வரும் ஒரு நபராகவும் காட்டப்பட்டு இருந்தார்.
இதையும் பாருங்க : அட, கபிலன் நண்பர் ஏற்கனவே இந்த விஜய் சேதுபதி படத்தில் நடித்துள்ளாரா. இதோ புகைப்படம்.
இந்தப் படத்தை விஜய்யின் உறவினரான சேவியர் பிரிட்டோ தயாரித்து இருந்தார். இதன் அனைத்து உரிமைகளையும் கைப்பற்றி லலித் குமார் வெளியிட்டார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் இந்த திரைப்படம் வெளியாகி இருந்தது. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தை இந்தியில் ரீ – மேக் செய்ய திட்டமிடப்பட்டு இருந்தது.
இதில் சல்மான் கான் நடிப்பதாக இருந்தது. சல்மான் கான், இதுவரை இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடித்தது இல்லை என்பதால் இந்த படம் சல்மான் கானுக்கு மிகவும் பிடித்துப்போனதாக தகவல்கள் வெளியானது. இருப்பினும் இந்த படத்தில் ஒரு சில மாற்றங்களை செய்து கதையை திருத்தி அமைக்குமாறு சல்மான் கான் கூறியதாக கூறப்படுகிறது.
எனவே, அவரது வயதுக்கும் இந்தி ரசிகர்களுக்கும் ஏற்றவாறு சில மாற்றங்கள் செய்து இந்த படத்தின் கதையை சல்மான் கானிடம் கூறியுள்ளனர். ஆனால், இந்த படத்தின் திருத்தப்பட்ட கதையில் திருப்தி அடையாமல் இந்த படத்தில் நடிப்பதில் இருந்து சல்மான் கான் விலகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த செய்தி தற்போது விஜய் ரசிகர்களை கடுப்பில் ஆழ்த்தியுள்ளது.
சல்மான் கான் நடிப்பில் இறுதியாக வெளியான ‘ராதே’ திரைப்படத்தின் கதையை விட மாஸ்டர் கதை சிறப்பாக தான் இருக்கு, சல்மான் கானுக்கு கதையை தேர்வு செய்ய தெரியவில்லை என்றும், மாஸ்டர் படத்தில் ஹீரோ கதாபாத்திரத்தை விட வில்லன் கதாபாத்திரம் பலமாக இருக்கும் என்பதால் தான் சல்மான் கான் இந்த படத்தை நிராகரித்து விட்டார் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். விஜய் ரசிகர்களின் விமர்சனங்களுக்கு சல்மான் கானின் ரசிகர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.