பீஸ்ட் படத்தின் ஒரு நாள் ரிலீசுக்கு முன் விஜய்யின் கடவுள் வெளியிட்ட வீடியோ – என்ன சொல்லியுள்ளார் பாருங்க.

0
539
SAC
- Advertisement -

பீஸ்ட் ரிலீசுக்கு ஒரு நாள் முன்பு விஜய்யின் அப்பா எஸ்ஏசி வெளியிட்ட வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே பாக்ஸ் ஆபீஸில் இடம் பெறும். கடைசியாக விஜய்யின் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றிருந்தது. இந்த படத்தை தொடர்ந்து தற்போது விஜய் அவர்கள் பீஸ்ட் என்ற படத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி இருக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள்.

-விளம்பரம்-
beast

இந்த படத்தில் அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து இருக்கிறார். மேலும், இந்த படத்தின் அரபிக்குத்து பாடல், ஜாலியோ ஜிம்கானா வெளியானதை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இந்த படத்தின் மூன்று பாடல்கள் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் இந்த பாடலுக்கு ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என பலரும் நடனமாடி வீடியோக்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார்கள். இந்த படத்தில் விஜய் ‘வீர ராகவன்’ என்ற பெயரில் நடித்து இருக்கிறார்.

இதையும் பாருங்க : தெலுங்கு பிரஸ்மீட்டில் மன்னிப்பு கேட்ட யாஷ் , கன்னட பிரெஸ் மீட்டில் அல்லு அர்ஜுனுக்கு நேர்ந்த இந்த சம்பவம் தான் காரணமா ? – வீடியோ இதோ.

- Advertisement -

பீஸ்ட் படம் பற்றிய தகவல்:

சமீபத்தில் தான் பீஸ்ட் படத்தின் ட்ரைலர் வெளியாகி இருந்தது. ட்ரெய்லரில் ஒரு mallலை பயங்கரமான தீவிரவாதிகள் ஹைஜாக் பண்ணுகிறார்கள். இந்த தீவிரவாத கும்பலில் இருந்து விஜய் எப்படி மக்களைக் காப்பாற்றினார்? என்பது தான் படத்தின் சுவாரஸ்யமே. இப்படி பீஸ்ட் படத்தின் பாடல்கள் துவங்கி ட்ரைலர் வரை ரசிகர்கள் மத்தியில் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து இருக்கிறது. மேலும், இந்த படத்திற்கான டிக்கெட் முன்பதிவுகள் ஏற்கனவே பல நகரங்களில் துவங்கிவிட்டது.

Beast

பீஸ்ட் படத்தின் பிரமோஷன்:

புக்கிங் துவங்கிய சில மணி நேரத்திலேயே இந்த படத்தின் டிக்கெட்டுகள் அனைத்தும் பதிவாகிவிட்டது. அதோடு விஜய் படங்கள் என்றாலே ரிலீசுக்கு முன்னர் இசை வெளியிட்டு விழா ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும். ஆனால், பீஸ்ட் படத்திற்கு இசை வெளியீட்டு விழா இல்லை என்று அறிவிப்பு வெளியானது. இதனால் விஜய் ரசிகர்கள் அனைவரும் பெரும் அப்செட் அடைந்தனர். ஆனால், சமீபத்தில் தான் பீஸ்ட் படத்தின் பிரமோஷனுக்காக விஜய் அவர்கள் சன் டிவியில் பேட்டி அளித்து இருந்தார். அப்போது தன் அப்பா பற்றியும் விஜய் பேசி இருந்தார்.

-விளம்பரம்-

நிகழ்ச்சியில் தன் அப்பா குறித்து விஜய் சொன்னது:

அதில் அவர், கடவுளை நேரில் பார்க்க முடியாது. ஆனால், அப்பாவை நேரில் பார்க்கலாம் என்று கூறி இருந்தார். ஏற்கனவே விஜய் மற்றும் அவரது அப்பா இடையே பிரச்சினை இருந்து வரும் நிலையில் விஜய் இப்படி சொன்னது சோசியல் மீடியாவில் வைரலானது. அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் கூட விஜய் தன்னுடைய அம்மா சோபா உடன் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டு இருந்தார். இதன் மூலம் விஜய் தன்னுடைய அப்பா மற்றும் அம்மா உடன் இடையே எந்த ஒரு பிரச்சனை இல்லை என்பது தெரிகிறது.

எஸ் ஏ சந்திர சேகர் வெளியிட்டுள்ள வீடியோ:

இந்த நிலையில் எஸ் ஏ சந்திர சேகர் அவர்கள் வெளியிட்டுள்ள வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அது என்னவென்றால், பாசமிகு பிள்ளைகளே வணக்கம், நாளை பீஸ்ட் ரிலீஸ். உங்களைப் போல நானும் காத்துக்கொண்டிருக்கிறேன் ரசிகனாக. உங்கள் வெற்றிக் கொண்டாட்டத்திற்கு என் வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார். இப்படி தன் மகன் படத்தின் ரிலீசுக்கு எஸ் ஏ சந்திரசேகர் வெளியிட்டுள்ள வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement