கன்னடாவில் அல்லு அர்ஜுன் மன்னிப்பு கேட்டதற்கு தெலுங்கில் யாஷை வைத்து ரீவேஞ்சு எடுத்ததாக கூறப்படும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கன்னட சினிமாவின் ராகிங் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகர் யாஷ். இவர் ‘ஜம்பட ஹுகுடி’ என்ற கன்னட படத்தின் மூலம் தான் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன் பின்னர் கன்னடத்தில் பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு பெரும் புகழை ஏற்படுத்தி கொடுத்தது கே ஜி எப் திரைப்படம் தான். இது ஐந்து மொழிகளில் டப் செய்யப்பட்டு உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது.
மேலும், இந்த படம் கன்னட சினிமா வரலாற்றிலேயே அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை செய்தது. இதனை தொடர்ந்து தற்போது கே ஜி எஃப் 2 படம் உருவாகியுள்ளது. பீஸ்ட் படம் வெளியாகி ஒரு நாள் இடைவெளியில் அதாவது ஏப்ரல் 14 ஆம் தேதி கேஜிஎப் 2 படம் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் தான் கே ஜி எஃப் 2 படத்தின் ட்ரெய்லர் வெளியானது. ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
கேஜிஎப் 2 படம் பற்றிய தகவல்:
இன்னும் சில தினங்களில் கேஜிஎப் 2 படம் ரிலீஸ் ஆக இருப்பதால் படக்குழுவினர் அனைத்து மொழிகளிலும் பிரஸ் மீட் நடத்தி படத்தை விளம்பரம் செய்து வருகின்றனர். அந்த வகையில் தெலுங்கில் கேஜிஎஃப் 2 படத்திற்கான பிரஸ்மீட் நடந்தது. யாஷ் அவர்கள் தெலுங்கில் நடந்த பிரஸ் மீட்டுக்கு தாமதமாக வந்து இருந்தார். அப்போது பிரஸ் மீட் 11 மணிக்கு தொடங்கப்படும் என்று அறிவித்து இருந்தார்கள். ஆனால், யாஷ் அவர்கள் 12.30 மணிக்கு வந்திருந்தார். இதனையடுத்து அங்கிருந்த பத்திரிகையாளர்கள் யாஷ் இடம் கேள்வி எழுப்பினார்கள்.
தெலுங்கு ப்ரஸ் மீட் சர்ச்சை:
அதில், ஏன்? இவ்வளவு நேரமாகிவிட்டது? உங்களால் நாங்கள் ஒன்றரை மணி நேரம் காத்துக் கொண்டிருக்கிறோம் என்று கேள்வி எழுப்பினார்கள். இதைக் கேட்டவுடன் யாஷ் கூறி இருப்பது, எனக்கு தெரியவில்லை. என்னுடைய படக்குழுவினர் சொல்வார்கள். நான் கிளம்பி வருவேன். 10 நிமிடம் லேட்டாக வந்தாலும் தவறு தவறு தான். நேரத்தை வீணடிக்க கூடாது. என்னை மன்னித்து விடுங்கள் என்று யாஷ் கூறி இருந்தார். இப்படி யாஷ் மன்னிப்பு கேட்டு இருப்பதை ஒட்டி கன்னட மொழியில் அல்லு அர்ஜுன் மன்னிப்பு கேட்டதை குறிப்பிட்டு சோஷியல் மீடியாவில் நெட்டிசன்கள் வைரலாக்கி வருகிறார்கள்.
புஷ்பா பிரஸ் மீட் குறித்த சர்ச்சை:
அது என்னவென்றால், சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த படம் புஷ்பா. இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா, பகத் பாஸில் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் செம்மர கடத்தலை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட கதை. படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. மேலும், இந்த படத்தின் ரிலீஸுக்கு முன்பு புஷ்பா படக்குழுவினர் அனைவரும் பல மொழிகளில் பிரஸ் மீட் நடத்தி இருந்தார்கள். அப்போது கனடாவிலும் புஷ்பா படத்திற்கான பிரஸ்மீட் நடந்தது.
வைரலாகும் நெட்டிசன்கள்:
அதில் அல்லு அர்ஜுன் அவர்கள் 2 மணி நேரம் தாமதமாக வந்திருந்தார். இதுகுறித்து கன்னட மொழி பத்திரிக்கையாளர்கள் கேட்டதற்கு, நான் தனி விமானத்தில் வந்தேன். வானிலை சரியில்லை என்பதால் வர தாமதமாகிவிட்டது. மன்னித்துவிடுங்கள் என்று அல்லு அர்ஜுன் கூறியிருந்தார். இப்படி கன்னடாவில் அல்லு அர்ஜுனை மன்னிப்பு கேட்க வைத்ததற்காகத் தான் தெலுங்கு பிரஸ்மீட்டில் யாஷை மன்னிப்பு கேட்க வைத்ததாக கூறப்படுகிறது. தற்போது இந்த தகவல் சோஷியல் மீடியாவில் ஜெட் வேகத்தில் வைரலாகி வருகிறது.