பெரியவர்களை மதிக்கும் விஷயத்தில் என் மகன் – விஜய் குறித்து அவரது தந்தை SAC.

0
428
SAC
- Advertisement -

விஜய் குறித்து எழுந்த சர்ச்சைக்கு இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் அளித்து இருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் படு வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் எஸ்.ஏ. சந்திரசேகர். இவர் திரைப்பட இயக்குனர் மட்டுமல்லாமல், நடிகர், தயாரிப்பாளர், எழுத்தாளர் என பன் முகங்களை கொண்டவர். 1981 ஆம் ஆண்டு வெளிவந்த ‘சட்டம் ஒரு இருட்டறை’ என்ற படத்தில் தான் எஸ் ஏ சந்திரசேகர் அவர்கள் இயக்குனராக அறிமுகமானார்.

-விளம்பரம்-
Sac

அதன் பின் இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் 70க்கும் மேற்பட்ட திரைப் படங்களை இயக்கி இருக்கிறார். இவர் இயக்கிய படங்கள் எல்லாமே மக்களிடையே நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றுத் தந்தது. இவர் 40 வருடங்களுக்கு மேலாக சினிமா திரை உலகில் பணியாற்றி வருகிறார். சமீபத்தில் இவர் தனியாக யூடுயூப் சேனல் ஒன்று தொடங்கி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இவர் கடைசியாக கோப்மாரி என்ற படத்தை இயக்கி இருந்தார்.

- Advertisement -

விஜய் தந்தை SAC :

தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு இவர் படத்தை இயக்கியும், நடித்தும் வருகிறார். மேலும், சினிமா உலகில் முடிசூடா மன்னனாக கலக்கிக் கொண்டிருக்கும் தளபதி விஜய்யை உருவாக்கியதும் எஸ் ஏ சந்திரசேகர் தான். எஸ் ஏ சந்திரசேகரின் மகன் தான் தளபதி விஜய். சமீப காலமாகவே விஜய்க்கும் அவருடைய தந்தை எஸ் ஏ சந்திரசேகருக்கும் பிரச்சனை அதிகமாக இருப்பது அனைவரும் அறிந்த ஒன்று. விஜய் பெயரை பயன்படுத்தி அரசியல் செயல்களில் ஈடுபட்டதால் தந்தை மீது விஜய் கோபத்தில் இருந்தார்.

sac

தந்தையுடன் ஏற்பட்ட பிரச்சனை :

இதனால் அவரிடம் விஜய் பேசுவதை நிறுத்திவிட்டார். மேலும், இருவருமே சுத்தமாக பேசிக் கொள்வதில்லை என்றெல்லாம் கூறியிருந்தார்கள். அதற்கேற்ப சமீபத்தில் தன்னுடைய 80வது பிறந்தநாளை எஸ் ஏ சந்திரசேகர் கொண்டாடி இருந்தார். அதற்கு கூட விஜய் வரவில்லை என்றும், வாழ்த்து சொல்லவில்லை என்றும் நெட்டிசன்கள் விஜய்யை கடுமையாக விமர்சித்தனர். இந்த நிலையில் எஸ் ஏ சந்திரசேகர் அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருந்தார்.

-விளம்பரம்-

விஜய் குறித்து சொன்னது:

அதில் அவரிடம் தந்தையை விஜய் மதிப்பதில்லை குறித்து எழுந்த வதந்திக்கு மறுப்பு தெரிவித்துக் கூறி இருந்தது, என் பையன் என்னை மதிக்கவில்லை என்று நான் எங்கேயாவது சொல்லி இருக்கேனா? நான் ஒரு அனுபவம் வாய்ந்த மனிதன். என் வாழ்க்கையில் பல குடும்பங்கள் மற்றும் குடும்ப பிரச்சினைகளை பார்த்திருக்கிறேன். எனது அனுபவங்களை மட்டுமே உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன். பெரியவர்களை மதிக்கும் விஷயத்தில் என் மகன் இந்த உலகில் சிறந்தவன் என்று கூறியிருக்கிறார்.

sac

விஜய் திரைப்பயணம்:

தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று தந்திருக்கிறது. பீஸ்ட் படத்தை தொடர்ந்து தற்போது விஜய் அவர்கள் வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் நடித்து வருகிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து தளபதி 67 படத்தை லோகேஷ் இயக்க இருக்கும் தகவல் வெளியாகி இருக்கிறது.

Advertisement