இந்த கேள்வியை விஜயிடம் கேளுங்கள்.! நிருபரிடம் கடுப்பான எஸ் ஏ சி.!

0
640
Vijay-Father
- Advertisement -

இளைய தளபதி விஜய் எப்போது அரசியலுக்கு வருவார் என்று அவரது ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ் ஏ சந்திரசேகர் இல்லத்திற்கு பி ஜே பி தொண்டர் ஒருவர் காவி வேஷ்டியை பரிசாக அனுப்பியுள்ளார்.

-விளம்பரம்-
Related image

இதற்கு முக்கிய காரணமே நாளைய சினிமா என்ற குறும்பட விழாவில் பேசிய விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திர சேகர், தேர்தல் முடிவுக்கு முன் வெளியான கருத்துக்கணிப்பை வைத்து, தமிழகத்தைப் பொறுத்தவரை தப்பித்துக் கொள்வோம். ஆனால், வெளியில் பொறுத்தரை கண்டிப்பாக தவறு செய்திருப்போம். மக்கள் அனைவரும் காவி வேட்டி கட்டிக்கொண்டு அலையப் போவதாகவும் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், பாஜகவை மறைமுகமாக விமர்சித்திருந்தார்.

இதையும் பாருங்க : பிக் பாஸ் லாஸ்லியாவின் டிக் டாக் ஐடி வீடியோ பாத்திருக்கீங்களா.! முதன் முறையாக இதோ.! 

- Advertisement -

அதற்கு ஏற்றார் போல விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் பிகில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்று வெளியாகி இருந்தது. அதில் விஜய் காவி வேஷ்டியை அணிந்திருந்தார். இந்த நிலையில் எஸ் ஏ சி, ஜெய்யை வைத்து இயக்கம் புதிய படத்தின் பிரஸ் மீட் ஒன்றில் கலந்து கொண்டார்.

Image result for vijay bigil

அப்போது நிருபர் ஒருவர், இந்த தேர்தலுக்கு பின்பு எல்லோரும் காவி வேட்டிதான் கட்டிக்கொண்டு சுற்ற வேண்டும் என்று நீங்கள் சொன்னீர்களே அதற்கு ஏற்றார்போல் விஜய் படத்தின் அடுத்த போஸ்டரில் காவி வேட்டி கட்டியிருக்கிறாரே அதை பற்றி உங்கள் கருத்து என்ன என்று கேள்வி கேட்டிருந்தார்.

-விளம்பரம்-

இந்த கேள்வியை கேட்டு கடுப்பான எஸ் ஏ சி,  விஜய்யை பற்றி இங்கு ஏன் கேட்கிறீர்கள் என் கருத்து என்னை பற்றிதான் சொல்ல முடியும். அவரை பற்றி நான் சொல்ல முடியாது. அவரிடம் சென்று கேளுங்கள். உங்கள் அப்பா இந்த வேட்டியை கட்டியிருக்கிறீர்களா என்று மிகவும் கடுப்பாக பதில் அளித்துள்ளார்.

Advertisement