என் மகனுக்கு 6 வயது இருக்கும் போது இரண்டாம் கல்யாணம் பண்ணேன் – அறிய புகைப்படங்களை வெளியிட்ட SAC.

0
808
vijay
- Advertisement -

தமிழ் சினிமாவின் முன்னனி நடிகராக வலம் வருபவர் விஜய் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்து வந்த விஜய் சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான பீஸ்ட் படம் தோல்வியை சந்தித்தது. இந்த படம் வியாபார ரீதியாக வெற்றி கண்டாலும் ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற தவறிவிட்டது. இந்நிலையில் கடந்த மாதம் விஜயின் வாரிசு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் படக் குழுவினர் வெளியிட்டனர். பெரும் எதிர்பார்ப்புடன் இருக்கும் இந்தப் படத்தின் நான்காம் கட்டம் படம் முடிப்பு முடிவு நிலையில் உள்ளது. இதனை தொடர்ந்து விஜய் லோகேஷ் கனகராஜன் இயக்கத்தில் தளபதி 67 என்ற படத்தில் நடிக்க உள்ளதாக தெரிகிறது ஆனால் இது சம்பந்தமான அதிகாரப்பூர்வமான தகவல்களள வெளிவரவில்லை. லோகேஷ் சமீபத்தில் பாலிவுட் பிரபல நடிகர் ஒருவரை சந்தித்து கதை சொல்லி முடித்ததாக ஒரு செய்திவந்தது. லோகேஷ் கனகராஜ் தளபதி 67 எடுத்து விட்டு பாலிவுட்டிற்கு செல்வாரா அல்ல பாலிவுட் சென்று வந்து தளபதி 67 இயக்குவாரா என குழப்பத்தில் ரசிகர்கள்.

-விளம்பரம்-

நடிகர் விஜய்க்கு அவரது தந்தை எஸ்.ஏ.சந்திர சேகர் இருவரும் இப்பொழுது சரியாக பேசிக் கொள்வதில்லை. இருவருக்கும் இடையில் சிறு சிறு சண்டைகள் என இனையத்தில் சில செய்திகள் வந்தவண்ணமே இருந்தது. இதை உண்மையாக்கும் வகையில் எஸ்.ஏ.சந்திர சேகர் அவருடைய என்பதாவது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார். அந்த புகைப்படங்களை எஸ்.ஏ.சந்திரசேகர் பகிர்ந்து இருந்தார். அந்த புகைப்படங்களில் சந்திரசேகரும் அவரது மனைவி மட்டுமே இருக்கிறார்கள். இதனால் எஸ்.ஏ.சி க்கும் நடிகர் விஜய் அவர்களுக்கும் பேசிக் கொள்வதில்லை என்ற கூற்று உண்மை என சிலர் சொல்லத் தொடங்கினார்கள்.

- Advertisement -

எஸ்.ஏ.சி யூடியுப் சேன்ல் :-

இந்நிலையில் எஸ்.ஏ.சந்திரசேகர் யார் இந்த எஸ்.ஏ.சி என்ற ஒரு யூடியுப் சேனல் நடத்தி வருகிறார். இந்த சேனலில் அவருடைய வாழ்க்கை நிகழ்வுகளையும் சந்தோசம் மற்றும் துக்க நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டே வருகிறார். அப்படி சில தினங்களுக்கு முன் அவர் வெளியிட்ட வீடியோவில் தான் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில் உள்ளே யாரை திருமணம் செய்து கொண்டேன் ? எதற்காக திருமணம் செய்து கொண்டேன் ? என்றும் யார் முன்னிலையில் திருமணம் நடந்தது ? என்றும் விளக்கமாக கூறியிருக்கிறார் அதை இந்த செய்தி தொகுப்பிலும் காணலாம்.

வேளாங்கன்னி, திருப்பதியிலும் மொட்டை போட்டுள்ளேன் :-

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரும் அவரது மனைவி ஷோபாவுக்கும் சிவாஜி கணேசன் அவர்களது துணைவியார் கமலா அவர்கள் தாலி எடுத்துக் கொடுத்து இந்து முறை படியும் இல்லாமல் கிறிஸ்தவ முறைப்படியும் இல்லாமல் எந்த முறை படியும் இல்லாமல் திருமணம் நடந்ததாகவும். அதன் பின்பு எங்கு சென்றாலும் குடும்பத்துடன் செல்வோம் என்றும் வேளாங்கண்ணியில் வேண்டிக் கொண்டு மொட்டை அடித்து இருக்கிறேன். அதே மாதிரி திருப்பதி வெங்கடாஜலபதி வேண்டிக்கொண்டு திருப்பதியிலும் மொட்டை அடித்திருக்கிறேன். இப்படி இந்து, கிறிஸ்தவ இரு மத சார்பு இல்லாமல் கல்யாணம் ஆன பின்பு வாழ்ந்து கொண்டிருந்தேன். எனக்கு அந்த சமயத்தில் ஒரே மதத்தில் இருப்பது இது போன்ற யோசனைகளும் துளியும் இல்லை.

-விளம்பரம்-

கிறிஸ்துவ முறைபடி இரண்டாவது திருமணம் :-

பின்பு என் மனைவி ஷோபா என்னிடம் வந்து நாம் கிறிஸ்தவ முறைப்படி இரண்டாவது திருமணம் செய்து கொள்ளலாமா என்று என்னிடம் கேட்டால். நான் அவளிடம் அதுவரைக்கும் கிறிஸ்துவ முறைக்கு மாறலாம் என்றெல்லாம் பேசியது கிடையாது. ஆனால் அவள் அதற்கு ஒரு விளக்கம் கொடுத்தால் நாம் இருவரும் ஆளுக்கு ஒரு படகில் பயணம் செய்து கொண்டிருக்கிறோம். திடீரென ஒரு பெரிய சுழலோ, அலையோ வந்தால் இருவரும் ஒரே இடத்தில் கரை சேர முடியாது வெவ்வேறு இடத்தில் தான் கரை சேருவோம் என்று அவள் கூறினாள். என் மனைவி கூறியதில் ஆயிரம் அர்த்தங்கள் இருந்ததை என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது. அதேசமயம் சினிமாவில் எனக்கு எவ்வித வெற்றியும் கிடைக்கவில்லை இதுதான் காரணமாக இருக்குமோ என்று நான் யோசிக்க ஆரம்பித்து விட்டேன்.

விஜய்க்கு கிடைத்த பாக்கியம் :-

என் மனைவி என்னிடம் பேசியதை அடுத்து இரண்டாவது திருமணம் செய்து கொள்ளலாம் கிறிஸ்தவ முறைப்படி என்று முடிவு எடுத்தோம். அதன்படி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சர்ச்சில் நாங்கள் இருவரும் இரண்டாவது செய்து கொண்டோம். நாங்கள் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும்போது என் மனைவி கர்ப்பம் தரித்து இருந்தார். இந்த இந்த கல்யாணம் விஜய் அவர்களின் முன்னிலையில் நடந்தது. விஜய் அவர்கள் எனது பெற்றோர்களின் திருமணத்தை பார்த்த பாக்கியம் எனக்கு மட்டும்தான் கிடைத்தது என்று வெளியில் பெருமையாக கூறிக் கொள்வார். அதன் பின்பு எனக்கு எனது மகள் பிறந்தால் அவள் வந்த நேரம் வாழ்க்கை வெற்றிமயமாக இருக்க வேண்டும் என்று வித்தியா என பெயர் வைத்தோம் வி பார் விக்டோரி. அதன்பின்பு சட்டம் ஒரு இருட்டறை என்ற படத்தில் டைரக்ஷன் வாய்ப்பும் எனக்கு கிடைத்தது அதிலிருந்து என் வாழ்க்கை ஒளிமயமாக மாறியது என எஸ்.ஏ.சந்திரசேகரன் கூறுகிறார்.

Advertisement