பெண்களை பற்றி சர்ச்சை பேச்சு.! வம்பில் மாட்டிக்கொண்ட விஜய்யின் தந்தை.!

0
653
S-A-c

பிரபல இயக்குனரும் விஜய்யின் தந்தையுமான எஸ் ஏ சதந்திர சேகர் தற்போது ஜெய்யை வைத்து ‘கேப்மாரி’ என்ற படத்தை இயக்கவிற்கிறார். இந்த படம் தான் தனது கடைசி படம் என்று அவர் கூறியுள்ளார். இந்த படத்தில் ஜெய் மற்றும் அதுல்யா நடிக்கின்றனர். சமீபத்தில் இந்த படத்தின் ப்ரெஸ் மீட் சென்னையில் நடைபெற்றது.

Image result for kepmari movie

அப்போது பேசிய எஸ் ஏ சி, இந்த படம் தான் என்னுடைய கடைசி படம். இது எனக்கு 70வது படம் அதே போல ஜெய்க்கு இது 25வது படம். இந்த படத்தில் இளைஞர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று அவர்கள் வழியிலேயே சென்று கூறியுள்ளேன். இந்த படத்திற்காக நிறைய வேலை செய்திருக்கிறேன்.

இதையும் பாருங்க : சிம்பு மற்றும் அசின் நடிக்க இருந்த படம்.! பர்ஸ்ட் லுக் போஸ்டரை தற்போது வெளியிட்ட சிம்பு.!

- Advertisement -

இந்த படம் ஐ டி துறை சம்பந்தபட்ட ஒரு படம். எனக்கு ஐ டி துறை குறித்து எதுவும் தெரியாது என்பதால் ஐ டி துறையில் பணிபுரியும், சினிமாவில் தொடர்பு இல்லாத சிலரை நான் சந்தித்து அவர்களிடம் இருந்து ஐடி துறை வாழ்க்கை குறித்து தெரிந்து கொண்டேன்.

Image result for kepmari movie

இப்போது உள்ள பெண்கள் ஆண்களிடம் காதலை சொல்ல தயங்குவதில்லை என்றும், ஒரே நேரத்தில் 4 பேரிடம் காதலை சொல்வதாகவும் எஸ்.ஏ. சந்திரசேகரின், பெண்கள் குறித்த இந்த கருத்து சர்ச்சைகளை கிளப்பி விட்டிருக்கும் நிலையில், சமூக வலைதளங்களில் பெண்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

-விளம்பரம்-

இதே நிகழ்ச்சியில் விஜய் பிகில் படத்தில் காவி வேஷ்டியை அணிந்த காரணம் குறித்து நிருபர் கேட்ட கேள்வியை கேட்டு கடுப்பான எஸ் ஏ சி,  விஜய்யை பற்றி இங்கு ஏன் கேட்கிறீர்கள் என் கருத்து என்னை பற்றிதான் சொல்ல முடியும். அவரை பற்றி நான் சொல்ல முடியாது. அவரிடம் சென்று கேளுங்கள். உங்கள் அப்பா இந்த வேட்டியை கட்டியிருக்கிறீர்களா என்று மிகவும் கடுப்பாக பதில் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement