அந்த படத்திற்கு பின் விஜய்க்கு நல்ல திரைக்கதை படம் அமையல – எஸ் ஏ சியின் பேச்சால் விஜய்யை வச்சி செய்யும் நெட்டிசன்கள். (வீடியோ இதோ)

0
14164
vijay
- Advertisement -

தான் விஜய்க்கு கதையை தேர்வு செய்வதை நிறுத்தியதில் இருந்து அவருக்கு நல்ல திரைக்கதை கொண்ட படம் அமையவில்லை என்று விஜய்யின் தந்தை எஸ் ஏ சி பகிரங்கமாக கூறி இருப்பது பெரும் சர்ச்சையையும் ஏற்ப்படுத்தி இருக்கிறது. சமீபத்தில் இருந்து தளபதி விஜய்க்கும் அவருடைய தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் இடையே சலசலப்பு சர்ச்சைகள் எல்லாம் இருப்பது அனைவருக்கும் தெரிந்ததே. இந்நிலையில் விஜய்க்கும், அவரது தந்தைக்கும் இடையே இருக்கும் பிரச்சினை முற்றிவிட்டது.

-விளம்பரம்-

நடிகர் விஜய் அவர்கள் தனது பெயரை பயன்படுத்தி கூட்டங்களை நடத்தவும் மற்ற பணிகளை மேற்கொள்ள கூடாது என்றும் தந்தை எஸ்ஏ சந்திரசேகர், தாயார் ஷோபா உள்ளிட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்து இருந்தார். விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்து செய்தார்.

இதையும் பாருங்க : பிக் பாஸ் 5வில் மாஸ்டர் பட பிரபலம் – கமல் கிட்ட லோகேஷ் ரெக்கமன்ட் பண்ணி இருப்பாரோ.

- Advertisement -

இந்த நிலையில் தான் நடத்தி வரும் விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்படுவதாக எஸ் எ சி அறிவித்து இருந்தார். இதனிடையே விஜய்யை பார்ப்பதற்கு எஸ்ஏ சந்திரசேகரும், அவர் மனைவியும் சென்றுள்ளதாகவும் அவர்களை பார்க்க முடியாது என்று விஜய் மறுத்துவிட்டதாகவும் சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகி இருந்தது.

ஆனால், அது முற்றிலும் பொய்யான தகவல் என்று எஸ் எ சி வீடியோ விளக்கம் ஒன்றை வெளியிட்டார். கடந்த சில மாதங்களாகவே எஸ் எ சி, விஜய் பற்றி பேசும் போது அது எதாவது சர்ச்சையில் முடிந்துவிடுகிறது. அந்த வகையில் சமீபத்தில் எஸ் எ சி செய்தி சேனல் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார்.

-விளம்பரம்-

அப்போது அவரிடம், துப்பாக்கி படம் வரைக்கும் விஜய் எந்த கதையில் நடிக்க வேண்டும் என்பதை நீங்கள்தான் தீர்மானித்தார்கள். ஆனால், துப்பாக்கி படத்திற்கு பின்னர் விஜய்க்காக கதை கேட்பதில் இருந்து நீங்கள் விலகுகினீர்கள். ஆனால், துப்பாக்கி படத்திற்கு பிறகு தான் விஜய் அவருக்கான கதையைத் தானே தேர்ந்தெடுத்து வெற்றிப்பாதையில் சென்று இருக்கிறாரோ என்ற எண்ணம் அவருக்கும் அவரது ரசிகர்களுக்கும் வருகிறது என்று கேள்வி கேட்டுக் கேட்கப்பட்டது.

இந்த கேள்வியை கேட்டுக்கொண்டு இருக்கும் போதே இடைமறித்து பதிலளித்த எஸ் ஏ சி துப்பாக்கி படம் வரைக்கும் வெற்றியே வரவில்லையா ? துப்பாக்கி எவ்வளவு பெரிய ஹிட் அதன்பின்னர் அப்படி ஒரு திரைக்கதை வரவே இல்லை நான் அடித்துச் சொல்வேன் அந்தப் படத்திற்குப் பின்னர் வெற்றியும் வந்திருக்கிறது.

ஆனால், துப்பாக்கி படம் போன்ற ஒரு திரைக்கதை வரவே இல்லை என்று கூறியுள்ளார் தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வர ட்விட்டரில் ஓடுனஒரேபடம்துப்பாக்கி என்ற ஹேஸ் டேக்கை போட்டு பலரும் கேலி செய்து வருகின்றனர். ஏற்கனவே விஜய்யை அஜித் ரசிகர்கள் வச்சி செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement