நடிகர் விஜயின் முதல் அரசியல் மாநாட்டை திருச்சியில் நடத்த வேண்டும் என்று விஜய் ரசிகர்கள் வைத்திருக்கும் விளம்பர கோரிக்கை தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முடி சூடாக மன்னனாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இவருக்கு கோடிக்கணக்கான பேர் ரசிகர்களாக இருக்கிறார்கள். இதனால் விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் ரசிகர்கள் ரசிகர் மன்றம் வைத்து இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.
இப்படி இருக்கும் நிலையில் 2020 ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் போட்டியிட்டார்கள். தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நின்ற 169 பேர் போட்டியிட்டு அதில் 129 பேர் வெற்றி பெற்றார்கள். இப்படி விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றது அரசியல் வட்டாரத்தில் கதிகலங்க வைத்தது. அதுமட்டுமில்லாமல் விஜய் அழைத்து அவர்களை பாராட்டியும் இருந்தார்.
அதன் பின் பல ஆண்டுகளுக்கு பிறகு நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிட்டது. இதற்கு தளபதி விஜய் அவர்கள் தன்னுடைய புகைப்படம் மற்றும் மக்கள் இயக்கத்தின் கொடியை தேர்தலில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அனுமதி கொடுத்திருக்கிறார். இப்படி விஜய் மக்கள் இயக்கம் அரசியலில் ஈடுபட்டாலும் தங்களின் ஜனநாயக கடமையை செய்து இருந்தார்கள். அதுமட்டும் இல்லாமல் விஜய் அவர்களை அடிக்கடி சந்தித்து இருந்த புகைப்படம் எல்லாம் இணையத்தில் வைரலாகி இருந்தது.
விஜயின் இந்த சந்திப்பு எல்லாம் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை சந்திப்பு இருந்தது. இதை தொடர்ந்து தொண்டர்கள் கூட்டம் மாதம் மாதம் நடைபெறும் என்று விஜய் இயக்கம் சார்பாக அறிவிக்கப்பட்டு இருந்தது. விஜய் அவர்கள் திரைத்துறையை தாண்டி அரசியலிலும் தன்னுடைய செல்வாக்கை நிலைநாட்ட இருக்கிறார் என்று பலரும் கூறுகிறார்கள். அதோடு விஜய் அரசியல் வருவதற்காக தான் இப்படி எல்லாம் செய்கிறார் என்றும் சோசியல் மீடியாவில் பேசப்பட்டிருந்தது. கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு அம்பேத்கரின் சிலைக்கு தமிழகம் முழுவதும் மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும் என்று விஜய் கோரிக்கை வைத்திருந்தார்.
அதன்படி விஜய் மக்கள் இயக்கத்தினரும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இருந்தார்கள். இது எல்லாம் வைத்து பார்க்கும் போது விஜய் அரசியலில் வருவதற்காக தான் இப்படி எல்லாம் செய்கிறார் என்று கூறுகிறார்கள். இந்த நிலையில் விஜய் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வைத்திருக்கும் தகவல் இணையத்தில் வருகிறது. அதாவது நடிகர் விஜயின் பிறந்தநாள் ஜூன் 22 ஆம் தேதி. இதனால் மதுரை அல்லது கோவையில் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் மாநாடு ஒன்றை நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள். மேலும், இந்த மாநாட்டை விஜய் மக்கள் இயக்கத்தின் முதல் அரசியல் மாநாடாக நடத்த விஜய் மக்கள் இயக்க தலைவர் புஸ்ஷி ஆனந்த் திட்டமிட்டு இருப்பதாக இணையத்தில் தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்த நிலையில் திருச்சியை சேர்ந்த விஜய் மக்கள் இயக்க முன்னாள் மாவட்ட தலைவர் ஆர்.கே.ராஜா அவர்கள் நடிகர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு பிறந்தநாள் காணும் தளபதியாரே நாளை முதல்வரே, திருச்சி என்று திருப்பம் தான். விரைவில் மாநாடு காத்திருக்கிறது என்று குறிப்பிட்டு திருச்சி மாநகரத்தின் புறநகர் பகுதியில் சுவர் விளம்பரங்களை வரைந்து இருக்கிறார்கள். இந்த விளம்பரம் மூலம் விஜய் மக்கள் இயக்கத்தின் முதல் மாநாடு திருச்சியில் நடத்த வேண்டும் என்று தங்களுடைய கோரிக்கையும் வைத்திருக்கின்றார்கள். ஏற்கனவே, 2020 ஆம் ஆண்டு நடிகர் விஜயின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் அரசியல் கட்சி துவங்கியதால் விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்து ஆர்.கே ராஜா நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.