அஜித்தின் இந்த படம் விஜய்க்கு மிகவும் பிடிக்கும்..!குறிப்பாக இந்த பாடல் என்றால்..!விஜய் நண்பர் சஞ்சீவ்

0
621

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கி வரும் நடிகர் விஜய், அவரது அப்பா சந்திரசேகர் மூலமாக திரையுலகிற்கு வந்தாலும் தனது தனிப்பட்ட திறமையால் இன்று ஒரு உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார். விஜக்கு போட்டியான நடிகர் என்றால் அது அல்டிமேட் ஸ்டார் அஜித் தான். என்ன தான் ஒரு சில ரசிகர்கள் தற்போதும் தல தளபதி சண்டையை போட்டுக்கொண்டு வந்தாலும் விஜய் மற்றும் அஜித் இடையே எப்போதும் ஆரோக்யமான உறவு இருக்கிறது என்று பல முறை நிறுப்பித்துள்ளனர்.

vijay and sanjeev

இந்நிலையில் விஜய் மற்ற நடிகர்களை எவ்வாறு பார்ப்பார் என்று நடிகர் சஞ்சீவ் கூறியுள்ளார்.விஜயின் நெருங்கிய நண்பர் சஞ்சீவ்.விஜயுடன் பல்வேறு படங்களில் நடித்தவர். மேலும், விஜயின் வாழ்க்கையில் நடந்த ஒரு சில முக்கிய நிகழ்வுகளில் எப்போதும் அவருடன் இருந்தவர். திரைப்படங்களை தாண்டி சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “திருமதி செல்வம் ” தொடரில் செல்வம் என்ற கதாபாத்திரத்தின் மூலம் குடும்ப ரசிகர்களையும் கவர்ந்தார்.

விஜய்யின் நெருங்கிய நண்பர் என்பதால்,சஞ்சீவ் எந்த பேட்டியில் பங்குபெற்றாலும் அவரிடம் விஜய் குறித்த கேள்வி கண்டிப்பாக முன்வைக்கப்படும். அந்த வகையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகர் சஞ்சீவ்விடம் நடிகர் விஜய். அந்த வகையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகர் சஞ்சீவிடம்,நடிகர் விஜய்மற்ற நடிகர்களை எவ்வாறு பார்ப்பார் என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சஞ்சீவ், பொதுவாக விஜய் மற்ற நடிகர்கள் பற்றிய கிண்டலான விமர்சங்களை ஊக்குவிக்கமாட்டான்.

அதிலும் அஜித் நடித்த வேதாளம் படம் என்றால் விஜய்க்கு மிகவும் பிடிக்கும். அதில் வரும் ஆளுமா டோலுமா பாடலில் அஜித் ஆடியதை கண்டு விஜய் அஜித்தை பாராட்டினான் என்று கூறியுள்ளார் சஞ்சீவ். அஜித்தை விட விஜய் ஒரு படி மேலே என்றாலும் அஜித்தின் நடனத்தை விஜய் பாரட்டியுள்ளது விஜய், அஜித் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான விடயமாவே அமைந்துள்ளது.