‘நீ தண்ணிய மட்டும் கண்டுபிச்சிட்ட என் பேர’ – கத்தி படத்தின் Deleted சீன் வீடியோ

0
79
- Advertisement -

விஜய்யின் கத்தி படத்தின் டெலிட் செய்யப்பட்ட காட்சி தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருப்பவர் விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே சூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறது. மேலும், இவருடைய நடிப்பிற்கு மட்டுமில்லாமல் நடனம், ஆக்ஷனுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

-விளம்பரம்-

இது ஒரு பக்கம் இருக்க, இன்னும் சில தினங்களில் விஜயின் பிறந்தநாள் வருவதால் நிர்வாகிகள், ரசிகர்கள் பலருமே ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறார்கள். அதோடு இது விஜயின் ஐம்பதாவது பிறந்த நாள் என்பதால் கோலாகலமாக கொண்டாட திட்டமிட்டு வருகிறார்கள். இதனால் சோசியல் மீடியாவில் விஜய் குறித்த செய்திகள் அதிகமாக வைரலாகப்பட்டு வருகிறது.

- Advertisement -

கத்தி படம்:

இந்த நிலையில் கத்தி படத்தில் டெலிட் செய்யப்பட்ட காட்சி குறித்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியிருந்த படம் கத்தி. இதற்கு முன்பே இவர்கள் கூட்டணியில் வெளியாகியிருந்த துப்பாக்கி படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தது.

படம் குறித்த தகவல்:

அதற்கு பின் இவர்கள் இருவரும் நடித்த கத்தி படமும் சிறப்பாக வெற்றி பெற்றது. இந்த படம் விவசாயத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது. இந்த படத்தில் சமந்தா கதாநாயகியாக நடித்திருந்தார். சதீஷ் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். இந்த படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து இருந்தது. மேலும் இந்த படத்தில் விஜய் அவர்கள் கதிரேசன், ஜீவானந்தம் ஆகிய இரண்டு வேடங்களில் நடித்திருந்தார்.

-விளம்பரம்-

டெலிட் செய்யப்பட்ட காட்சி:

இந்நிலையில் கத்தி படத்தில் ஜீவானந்தம் கதாபாத்திரத்தின் டெலிட் செய்யப்பட்ட காட்சி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடைசியாக விஜய் நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் வெளியாகி இருந்த லியோ படம் மிக பெரிய அளவில் வெற்றி பெற்று இருந்தது. தற்போது இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் என்ற படத்தில் நடித்திருக்கிறார்.

கோட் படம்:

இந்த படத்தினுடைய வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. செப்டம்பர் 5 ஆம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது. இதை அடுத்து கடைசியாக தளபதி 69 என்ற படத்தில் மட்டும் விஜய் நடிக்க இருக்கிறார். அதற்கு பின் இவர் முழு நேர அரசியலில் ஈடுபட இருப்பதால் கட்சி பணிகளும் நடந்து வருகிறது. இவர் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி இருக்கிறார். தற்போது கட்சியின் உறுப்பினர்கள் சேர்ப்பதற்கான வேலைகள் சென்று கொண்டு இருக்கிறது.

Advertisement