சமீபத்தில் தான் கீர்த்தி சுரேஷுக்கு விஜய் இதை செய்தார்,இது அவர் மனைவிக்கும் தெரியும் – சர்ச்சையை ஏற்படுத்திய பிரபலத்தின் ட்வீட்.

0
1002
Vijay
- Advertisement -

தமிழ் சினிமாவில் எத்தனையோ நட்சத்திர தம்பதிகள் காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள். அஜித் ஷாலினி, சூர்யா ஜோதிகா, பிரசன்னா-சினேகா என்று இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால், இளையதளபதி விஜய்யின் காதல் திருமணம் சற்று வித்தியாசமானது தான். கோலிவுட்டில் சிறந்த நட்சத்திர தம்பதிகளாக திகழ்ந்து வருகிறார்கள் நடிகர் விஜய்-சங்கீதா. மேலும்,இவர்களுக்கு திருமணம் ஆகி 22 ஆண்டு காலமாக ஒன்றாக வாழ்ந்து வருகின்றார்கள்.

-விளம்பரம்-

- Advertisement -

இவர்களுக்கு சஞ்சய் என்ற மகனும், சாஷா என்ற மகளும் இருக்கிறார்கள். சினிமா துறையில் மாஸ் காட்டிக் கொண்டிருக்கும் தளபதி விஜய்யின் தீவிர ரசிகை தான் சங்கீதா. தளபதி விஜய் அவர்கள் மீது கொண்ட பற்றின் காரணமாக சங்கீதா நம்ம தளபதியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆகஸ்ட் 25ஆம் தேதி 1999 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

22 ஆண்டுகள் சங்கீதாவுடன் வாழ்ந்து வந்த விஜய் தற்போது மனைவியை பிரிந்துவிட்டதாக கடந்த சில மாதங்களாக சமூக வலைதளத்தில் ஒரு செய்தி வைரலாகி வருகிறது. மேலும், விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷுக்கும் தொடர்பு ஏற்பட்டதால் தான் சங்கீதா விஜய்யை பிரிந்து லண்டன் சென்றுவிட்டார் என்றும் சிலர் கூறி வருகின்றனர். சங்கீதா விஜயை பிரிந்ததால் தான் எப்போதும் விஜய்யின் படங்களின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ளும் சங்கீதா வாரிசு ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளவில்லை என்று கிசுகிசுக்கப்பட்டது.

-விளம்பரம்-

அதே போல கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடந்த பிரியா அட்லியின் சீமந்த நிகழ்ச்சியிலும் சங்கீதா கலந்து கொள்ளவில்லை விஐய் மட்டுமே அந்த நிகழ்ச்சிக்கு நேரில் சென்றார் என்றும் செய்திகள் பரவி வருகிறது. இப்படி ஒரு பரபரப்பான விஷயம் ஏற்கனவே பரவி வரும் நிலையில், அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில், விஜய்யின் விக்கிபீடியா பக்கத்தில் 2022 ஆம் ஆண்டு சங்கீதாவை விஜய் விவாகரத்து செய்துவிட்டார் என்று அப்டேட் செய்யப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் , சென்சார் உறுப்பினரும், திரைப்பட விமர்சகருமான உமைர் சந்து விஜய் – கீர்த்தி சுரேஷ் குறித்து சர்ச்சைக்குரிய ட்வீட் ஒன்றை போட்டுள்ளார். அதில் ‘கீர்த்தி சுரேஷுடன் விஜய் ரகசிய உறவில் இருந்து வருகிறார். சமீபத்தில் அவருக்கு ஆடம்பர கார் மற்றும் பரிசுகளை வழங்கி இருக்கிறார். இது அவரின் மனைவிக்கும் தெரியும், ஆனால், அவருக்கு இதை பற்றி எந்த கவலையும் இல்லை’ என்று குறிப்பிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு ட்விட்டரில் விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

உமைர் சந்து இது போன்று சர்ச்சையான விஷயங்களை பதிவிடுவது முதல் முறை அல்ல. இது போன்று பல முறை பல்வேறு பிரபலங்கள் குறித்து ஆதாரம் இல்லாத பல தகவல்களை கூறி இருக்கிறார். சமீபத்தில் கூட நாக சைதன்யா, சமந்தாவை தாக்கியதாகவும், சமந்தா கர்ப்பமாக இருந்ததாகவும் நாக சைத்னயா செய்த டார்சரால் சமந்தா கரு களைப்பு செய்துவிட்டதாகவும் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement