லியோ படத்தில் ஏற்பட்ட முக்கிய மாற்றம். தயாரிப்பாளர் சொன்ன தகவல் – விஜய் தான் காரணமா ?

0
554
Leo
- Advertisement -

விஜயின் லியோ படம் குறித்த ஒரு புதிய அப்டேட் தற்போது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான படம் பீஸ்ட். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது.

-விளம்பரம்-
Leo

இந்த படத்தை தொடர்ந்து சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் வாரிசு. இந்த படத்தை வம்சி இயக்கி இருந்தார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர், பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, நாசர், போன்ற பலர் நடித்து இருக்கின்றனர். தமன் இந்த படத்திற்கு இசை அமைத்து இருந்தார். குடும்ப பின்னணியை கொண்ட கதை. இந்த படம் பொங்கல் விருந்தாக ரசிகர்களுக்கு வெளியாகி இருந்தது.

- Advertisement -

விஜய் திரைப்பயணம்:

மேலும், வாரிசு படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தாலும், உலக அளவில் 300 கோடிக்கும் மேல் அதிகமாக வசூல் செய்து இருந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகி இருந்தது. இதனை அடுத்து தற்போது தளபதி விஜய்யை வைத்து “லியோ” என்ற படத்தை லோகேஷ் இயக்கி வருகிறார். இதற்கு முன் லோகேஷ் அவர்கள் விஜய்யை வைத்து மாஸ்டர் என்ற படத்தை இயக்கி இருந்தார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் லியோ படம் உருவாகி வருகிறது.

லியோ படம்:

இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன், மேத்திவ் தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து வருகின்றனர். இந்த படம் அதிரடி ஆக்சன் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. காஷ்மீர் பகுதியில் சில முக்கியமான காட்சிகள் படப்பிடிக்கப்பட்டிருக்கிறது. இதனை அடுத்து தற்போது சென்னையில் மும்முரமாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

-விளம்பரம்-

லியோ படம் குறித்த அப்டேட்:

இந்த நிலையில் லியோ படம் குறித்த அப்டேட் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, விஜய் உடைய படம் என்றாலே ரசிகர்கள் பலரும் அதிக எதிர்பார்ப்புடன் இருப்பார்கள். அது மட்டும் இல்லாமல் லியோ படத்தினுடைய ஆடியோ வெளியீட்டு விழா எப்போது? எங்கு? என்று பலரும் ஆர்வத்துடன் கேட்டு வருகின்றனர். ஆகவே, விஜயின் பிறந்தநாள் ஜூன் 22ஆம் தேதி வருவதால் அன்றே லியோ படத்தினுடைய மிகப்பெரிய அப்டேட் வெளியாகும் என்று படத்தினுடைய தயாரிப்பாளர்கள் லலித் குமார் தெரிவித்திருக்கிறார்.

தயாரிப்பாளர் அளித்த பேட்டி:

அது மட்டும் இல்லாமல் சமீபத்தில் விருது வழங்கும் விழா ஒன்றில் கூட லலித் குமார் கலந்து கொண்டிருந்தார். அப்போது அவர் படத்தின் ஆடியோ அதில் அவர், லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை சென்னைக்கு வெளியே நடத்த நடிகர் விஜய் விரும்புகிறார். திருச்சி, மதுரை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய நகரங்களுக்கு இடையே ஏதேனும் ஒரு பகுதியில் லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை நடத்த முடிவு செய்திருக்கிறோம் என்று கூறி இருக்கிறார்.

Advertisement