பிளாஸ்டிக் ஒழிப்பு பணியில் விஜய் – விஜய்யின் உத்தரவின்படி துணிப்பையை மக்களுக்கு அளித்த VMI, என்ன படம் போட்டு இருக்கு பாருங்க,

0
474
VMI
- Advertisement -

பிளாஸ்டிக் ஒழிப்பை செயல்படுத்த வேண்டும் என்று விஜய் உத்தரவின்படி விஜய் மக்கள் இயக்கம் செய்து வரும் சேவை குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் வசூல் மன்னனாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பேர் ரசிகர்களாக உள்ளார்கள். இதற்காக விஜய் மக்கள் இயக்கம் என்ற ஒன்றை ரசிகர்கள் வைத்து இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இப்படி இருக்கும் நிலையில் 2020ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சேர்ந்தவர்கள் போட்டியிட்டார்கள்.

-விளம்பரம்-

இது குறித்து கூட விஜய்க்கும் அவருடைய தந்தைக்கும் இடையே நிறைய கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பேச்சு வார்த்தை இல்லாமல் பிரிவில் இருந்தார்கள். மேலும், தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மொத்தம் 169 பேர் போட்டியிட்டார்கள். அதில் 129 பேர் வெற்றி பெற்றுள்ளார்கள். இப்படி விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றது அரசியல் வட்டாரத்தில் கதிகலங்க வைத்தது.

- Advertisement -

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி கண்ட விஜய் மக்கள் இயக்கம்:

அதுமட்டுமில்லாமல் வெற்றியாளர்களை அழைத்து அவர்களை பாராட்டியும் இருந்தார் விஜய். பின் பல ஆண்டுகளுக்கு பிறகு தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து தமிழக அரசு அறிவித்து இருந்தது. வழக்கம் போல் இதில் எதிர் கட்சி அதிமுக, ஆளும் கட்சி திமுக, பாஜக, நாம் தமிழர், சுயேட்ச்சை வேட்பாளர் என பல கட்சிகள் போட்டி இட்டார்கள். அதில் விஜய் மக்கள் இயக்க கட்சியும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் :

மேலும், தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெற்றது. மக்கள் அனைவரும் தங்களின் ஜனநாயக கடமையை செய்து இருந்தார்கள். மேலும், நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் பின்னடைவை சந்தித்து இருந்தது. இருந்தாலும் அவர்கள் சோர்வடையாமல் தொடர்ந்து மக்கள் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக் கிழமையை மக்கள் பணியில் ஈடுபடுவதற்கு என்று செலவழிக்க வேண்டும் என்று விஜய் மக்கள் இயக்கம் தீர்மானம் செய்து உள்ளது.

-விளம்பரம்-

பிளாஸ்டிக் ஒழிப்பு ஊக்குவிக்க பிரச்சாரம் நடைபெறும் நாள்:

அந்த வகையில் பிளாஸ்டிக் ஒழிப்பை ஊக்குவிக்கும் விதமான ரசிகர்கள் தங்கள் பகுதியில் செயல்படுத்த வேண்டுமென்று புஸ்ஸி ஆனந்த் அறிவித்துள்ளார். இதனால் தமிழகம், கேரளா, புதுச்சேரி, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை அன்று விஜய் மக்கள் இயக்கத்தின் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு திட்டம் நடைமுறைப் படுத்த திட்டமிட்டுள்ளார்கள். இந்நிலையில் விஜய் அவர்களின் உத்தரவின்படி,

பிளாஸ்டிக் ஒழிப்பை ஊக்குவிக்க பிரச்சாரம்:

அகில இந்திய பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அவர்களின் ஆலோசனையின்படி அனைத்து மாவட்டங்களிலும் பிளாஸ்டிக் ஒழிப்பை ஊக்குவிக்க பிரச்சாரம் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு துணிப்பை வழங்கப்பட்டுள்ளது. தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதனால் அரசியல்வாதிகள் கதிகலங்கி போய் உள்ளார்கள். மேலும், இவர்களின் செயலை பார்த்த நெட்டிசன்கள், பிற ரசிகர்கள் என பலரும் பாராட்டி வருகிறார்கள்.

Advertisement