தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற பாட்சா என்றால் அது தளபதி விஜய் தான். அவருக்கு போட்டிகள் இருந்தாலும் அவரது படங்கள் என்றால் தியேட்டர் உரிமையாளர்கள் முதல் தியேட்டரின் முன்னால் சின்ன டீ கடை வைப்பவர் கூட கல்லா கட்டலாம். அப்படிப்பட்ட வசூல் மன்னன் இன்று உருவாக ஒரு முக்கிய காரணம் யார் என்றால் தியேட்டர் உரிமையாளர்கள் என்றால் மிகையாகாது.
ஆறாம் திணை படத்தின் விழா நடைபெற்றது. இந்த விழாவில் தியேட்டர் உரிமையாளர்கள் சங்க தலைவர் அபிராமி ராமநாதன் கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதில் முக்கியமான அம்சம் என்னவென்றால் விஜய் இன்று இவ்வளவு பெரிய ஆளாக இருக்க காரணம் தியேட்டர் உரிமையாளர் என்பது தான்.
தற்போது எல்லாம் படம் வெளியாகி 10 முதல் 15 நாட்களில் படத்தின் உரிமையை அமேஸானுக்கு கொடுத்துவிடுகின்றனர். அதே படம் தியேட்டரில் 100 நாட்கள் ஓடினால் பலரும் வாழ்க்கை பெறுவர்.
ஒரு 100 நாள் கழித்து கூட அப்படி உரிமையை மாற்றி கொடுக்கலாம். தியேட்டர்கள் போன் முட்டை இடும் வாத்தாகும். விஜய் நடிக்கும் படங்கள் ஒரு காலத்தில் சிறு பட்ஜெட் படங்கள் தான். தற்போது அவரை இவ்வளவு பெரிய ஆளாக வசூல் மன்னனாக இருக்கிறார் என்றால் அதற்கு காரணம் தியேட்டர் உரிமையாளர் ஆகிய நாங்கள் தான். நாங்கள் தான் அவரது படங்களை பல நாட்கள் தியேட்டரில் ஓட வைத்து பெரிய ஆள் ஆக்கினோம். எனக் கூறினார் அபிராமி ராமநாதன்.