விஜய்யின் ‘மாஸ்டர்’ பட டைட்டில் இந்த தெலுங்கு படத்தின் காப்பியா? அட பாவீங்களா அதுக்குள்ள ஆரம்பிச்சிடீங்களே.

0
13010
master
- Advertisement -

சமீப காலமாகவே இளையதளபதி விஜயின் படங்கள் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறது அதிலும் இறுதியாக இவரது நடிப்பில் வெளியான சர்க்கார் மற்றும்பிகில் திரைப்படங்கள் கதைத்திருட்டு விவகாரத்தில் சிக்கியது. இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள மாஸ்டர் படத்தின் டைட்டிலும் காப்பியடிக்க பட்டுள்ளது என்ற ஒரு சர்ச்சை சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இளைய தளபதி விஜய் நடிப்பில் இறுதியாக அட்லி இயக்கத்தில் வெளியான பிகில் திரைப்படம் 300 கோடி ரூபாயை வசூல் செய்து சாதனை படைத்தது.

-விளம்பரம்-
Image

- Advertisement -

இந்த நிலையில் பிகில் படத்தை தொடர்ந்து மாநகரம், கைதி போன்ற வெற்றி படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது விஜய் தனது 64 வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பேட்டை பட புகழ் மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். மேலும் விஜய் சேதுபதி சாந்தனு பாக்கியராஜ் ஆண்ட்ரியா கௌரி கிஷன் ஸ்ரீமன் சஞ்சீவ் போன்ற பல்வேறு நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த படத்தை வெளியிட திட்டமீட்டுள்ளனர்.

இதையும் பாருங்க : வாத்தியாருக்கெல்லாம் வாத்தியார்.தளபதி 64 படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் இதோ.

-விளம்பரம்-

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் இன்று மாலை 5.00 மணிக்கு வெளியாகும் என பட குழுவினர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவித்திருந்தனர். இந்த இந்த படத்திற்கு சின்ன வாத்தியார் அல்லது ஜே டி என்று தலைப்புகள் வைத்திருப்பதாக ஏற்கனவே பல்வேறு தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்த நிலையில் இந்த படத்திற்கு ‘ மாஸ்டர்’என்று தலைப்பை வைத்துள்ளனர். இந்த தலைப்பால் ரசிகர்கள் குஷியாகி உள்ளார்கள். இந்த நிலையில் மாஸ்டர் என்ற பெயரில் ஏற்கனவே தெலுங்கில் ஒரு படம் வெளியாகியுள்ளது தெரியவந்துள்ளது.

Image result for master telugu movie
https://en.wikipedia.org/wiki/Master_(1997_film)

தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் கடந்த 1997 ஆம் ஆண்டு வெளியான ‘மாஸ்டர் ‘ படம் தான் அது. தமிழ் சத்யா, அண்ணாமலை, பாட்ஷா போன்ற படங்களை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா தான் இந்த படத்தை இயக்கி இருந்தார். மேலும், குணா படத்தில் ரோஷிணியும் இந்த படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டிலை தற்போது விஜய் படத்திற்கு வைத்துள்ளனர் என்று சமூக வலைதளத்தில் ட்ரோல் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.

Advertisement