தந்தைக்கு நடந்த ஆப்ரேஷன், அமெரிக்காவில் இருந்து ஓடோடி வந்து சந்தித்த விஜய். வைரலாகும் புகைப்படம் இதோ.

0
872
- Advertisement -

விஜய் தனது தாய் தந்தையாருடன் எடுத்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. தற்போது லியோ படத்தை முடித்துள்ள விஜய் அடுத்தபடியாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். விஜய் இந்த படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்க உள்ளதாக புதிய தகவல் ஒன்று வெளியானது. இதில் ஒன்று இளம் வயது கதாபாத்திரம் என்பதால், விஜய்யை இளமையாக காட்ட முடிவு செய்துள்ள வெங்கட் பிரபு, இதற்கான பணிகளுக்காக விஜய்யுடன் கடந்த மாதம் அமெரிக்கா சென்றார்.

-விளம்பரம்-

அதன் பணிகளை ஒரு சில நாட்களில் முடித்துவிட்டு வெங்கட் பிரபு கடந்த வாரமே சென்னை திரும்பினாலும், நடிகர் விஜய் அங்கு தங்கி ஓய்வெடுத்து வந்தார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் விஜய், தனது சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு மீண்டும் சென்னைக்குதிரும்பினார் . அவர் சென்னை விமானம் நிலையம் வந்த போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் அதிகம் வைரலாகியது.

- Advertisement -

சென்னை திரும்பிய கையோ நடிகர் விஜய் தனது தாய் தந்தையரை சந்தித்து இருக்கிறார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. விஜய்யின் சந்திரசேகர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பேட்டி ஒன்றை அளித்து இருந்தார். வாழ்க்கையில் அடிக்கடி சுவாரசியமான, மறக்க முடியாத விஷயங்கள் நடக்கும். அப்படித்தான் சமீபத்தில் என்னுடைய வாழ்க்கையில் நடந்தது.அதை உங்களுடன் ஷேர் செய்ய தான் இந்த வீடியோ வெளியிட்டேன். நான் எப்போதுமே சுறுசுறுப்பாகவும் புத்துணர்ச்சியுடன் தான் இருப்பேன். எல்லோருமே என்னை இந்த வயதிலும் எப்படி என்று பாராட்டுவார்கள்.

பலருக்குமே என்னை பற்றி நன்றாக தெரியும். ஆனால், கடந்த இரண்டு மாதங்களாக எனக்கு ஏதோ ஒரு மாதிரியாகவே இருந்தது. எனக்கே முன்பு போல் என்னுடைய உடம்பு இல்லையே என்று கேள்வி எழுந்தது. இதனால் நான் உடனே மருத்துவர் அணுகினேன். அவர் எனக்கு ஸ்கேன் டெஸ்ட் எல்லாம் எடுத்து பார்க்கும்போது ஒரு சின்ன பிரச்சனை ஆப்ரேஷன் செய்யணும் என்று சொன்னார்.நானும் உடனே சரி என்று சொல்லி ஆபரேஷன் செய்து விட்டேன்.

-விளம்பரம்-

இரண்டு நாட்களிலேயே நான் குணமாகி விட்டேன். தற்போது நன்றாக இருக்கிறேன். இதை நான் எதற்கு சொல்கிறேன் என்றால், எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் தைரியத்துடனும், பாசிட்டிவான எண்ணத்துடனும் செயல்பட்டால் உடனடியாக தீர்வு நல்லாதாக தான் இருக்கும். நான் அப்படி எடுத்துக் கொண்டதால்தான் என்னுடைய வாழ்க்கையிலும் நல்ல விஷயங்கள் நிகழ்ந்தது. எல்லோரும் நம்பிக்கையுடனும் பாசிட்டிவ் ஆகவும் இருங்கள். நல்லதே நடக்கும் என்று கூறி இருந்தார்.

சமீப காலமாகவே விஜய்க்கும் அவருடைய தந்தை எஸ் ஏ சந்திரசேகருக்கும் பிரச்சனை அதிகமாக இருப்பது அனைவரும் அறிந்த ஒன்று. விஜய் பெயரை பயன்படுத்தி அரசியல் செயல்களில் ஈடுபட்டதால் தந்தை மீது விஜய் கோபத்தில் இருந்தார்.இதனால் அவரிடம் விஜய் பேசுவதை நிறுத்திவிட்டார். மேலும், இருவருமே சுத்தமாக பேசிக் கொள்வதில்லை என்றெல்லாம் கூறியிருந்தார்கள்.

அதற்கேற்ப தன்னுடைய 80வது பிறந்தநாளை எஸ் ஏ சந்திரசேகர் கொண்டாடி இருந்தார். அதற்கு கூட விஜய் வரவில்லை என்றும், வாழ்த்து சொல்லவில்லை என்றும் நெட்டிசன்கள் விஜய்யை கடுமையாக விமர்சித்தனர்.மேலும், ஒரு பேட்டியில் அப்பாவிடம் பேசுப்பா என்று எஸ் ஏ சி அளித்த பேட்டி பலரை கலங்க வைத்தது. இப்படி ஒரு நிலையில் தனது தந்தையை நேரில் சந்தித்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் விஜய்.

Advertisement