வட சென்னை திரைப்படம் இந்த சித்தார்த் படத்தின் காப்பியா – அட, பாக்க அப்படி தான் இருக்கு.

0
742
Vadachennai
- Advertisement -

தனுஷ்- வெற்றிமாறன் கூட்டணியில் வெளியான வடசென்னை படம் பிரபல நடிகரின் படத்தின் காப்பி என்ற புது சர்ச்சை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் மிகவும் வெற்றிகரமான ஒரு இயக்குனராக திகழ்ந்து வருகிறார் வெற்றிமாறன். இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது.

-விளம்பரம்-

அதிலும் தனுஷ்- வெற்றிமாறன் கூட்டணியில் வெளிவந்த படங்கள் எல்லாம் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்திருக்கிறது. அந்த வகையில் இயக்குனர் வெற்றிமாறன் தனுஷை வைத்து இயக்கிய படங்களில் ஒன்று தான் வட சென்னை. இந்த படத்தில் ஆண்ட்ரியா,ஐஸ்வர்யா ராஜேஷ், அமீர், கிஷோர் ,சமுத்ரகானி கருணாஸ் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படம் வட சென்னை மக்களின் 35 வருட வாழ்க்கை வரலாற்றை காட்டுகிறது.

- Advertisement -

வட சென்னை படம்:

இந்த படத்தில் தனுஷ் கேரம் போர்டு விளையாட்டு வீரராக நடித்துள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ‘வடசென்னை’ திரைப்படம் மாபெறும் வெற்றியடைந்தது. இந்த படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது மட்டும் இல்லாமல் நல்ல வசூலையும் பெற்றுத் தந்திருக்கிறது. இதனால் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்திருக்கின்றார்கள்.

Striker படம்:

ஆகவே, இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இருப்பதாக வெற்றிமாறனும் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார். தற்போது அதற்கான பணியில் வெற்றிமாறன் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் வடசென்னை படம் பிரபல நடிகர் நடித்த படத்தின் காப்பி என்ற புது சர்ச்சை எழுந்திருக்கிறது. அதாவது, தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவர் சித்தார்த். இவர் நடிப்பில் ஹிந்தியில் 2010 ஆம் ஆண்டு வெளியான படம் தான் Striker.

-விளம்பரம்-

வட சென்னை காப்பி குறித்த சர்ச்சை:

இந்த படத்திற்கு பிறகு தான் வட சென்னை படம் வந்திருக்கிறது. சித்தார்த்தின் Striker படத்தின் எண்பது சதவீதத்தை அப்படியே வடசென்னை படத்தில் காப்பி செய்து இருக்கிறார்கள். சேரி மக்கள், கேரம் போர்டு டோர்னமெண்ட், குணா கதாபாத்திரம், வாட்டர் டேங்க் சீன், க்ரைம் பேக்ரவுண்ட், ரவுடிசம், காஸ்ட்யூம்ஸ் என பல விஷயங்களை இந்த படத்தில் இருந்து அப்படியே வட சென்னை படத்திற்கு காப்பி அடித்து இருக்கிறார்கள்.

நெட்டிசன்கள் கமெண்ட்:

தற்போது இதை சோசியல் மீடியாவில் நெட்டிசன் ஒருவர் பகிர்ந்து யூடிபில் Striker படம் வெளியாகி இருக்கிறது. சுலபமாக பாருங்கள் என்று பதிவிட்டு இருக்கிறார். தற்போது இந்த பதிவை பார்த்தவுடன் ரசிகர்கள் பலருமே வடசென்னை படத்திற்கு ஆதரவாகவும் விமர்சித்தும் பதிவு போட்டிருக்கிறார்கள். சிலர் காப்பி அடித்தால் தான் பாஸ் கிடைக்கும் போல என்றெல்லாம் கிண்டலாகவும் பதிவிட்டு இருக்கிறார்கள்.

Advertisement