அமெரிக்கா ஹோட்டலில் மகனை சந்தித்த விஜய்.! வைரலாகும் புகைப்படம்.!

0
3321
Vijay
- Advertisement -

இளைய தளபதி விஜய் தமிழ் சினிமாவின் ஒரு மாஸ் நடிகராக திகழ்ந்து வருகிறார். இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. விஜய் தற்போது தனது 63 ஆவது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை இயக்குனர் அட்லீ இயக்கி வருகிறார்.

-விளம்பரம்-

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார். மேலும் ,இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாராவும் மற்றும் யோகி பாபு விவேக் டேனியல் போன்ற பல்வேறு முக்கிய நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

- Advertisement -

இந்தப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்புகள் சென்னையில் பல்வேறு பகுதியில் நடைபெற்று வந்த நிலையில் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனால் விஜய் தனது குடும்பத்தாருடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.நடிகர் விஜய்க்கு சஞ்சீவ் என்ற மகனும் திவ்யா சாஷா என்ற மகளும் இருப்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று.

விஜய் மகன் சஞ்சீவ் தற்போது அமெரிக்காவில் சினிமா சம்மந்தப்பட்ட படிப்பு படித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தனது மகனை பார்க்க நடிகர் விஜய் அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். அங்கு இருவரும் ஹோட்டல் ஒன்றில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. தற்போது இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement