தமிழ் சினிமாவில் 2002-ஆம் ஆண்டு வெளி வந்த படம் ‘ஃபைவ் ஸ்டார்’. இதில் ஹீரோவாக பிரபல நடிகர் பிரசன்னா நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக கனிகா டூயட் பாடி ஆடியிருந்தார். இந்த படத்தினை இயக்குநர் சுசி கணேசன் இயக்கியிருந்தார். இது தான் இயக்குநர் சுசி கணேசனின் முதல் படமாம். தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான மணிரத்னமிடம் ‘பம்பாய், இருவர், உயிரே’ ஆகிய மூன்று படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றி சினிமா கற்றவராம் சுசி கணேசன்.

இதனைத் தொடர்ந்து ‘டாப் ஸ்டார்’ பிரஷாந்தின் ‘விரும்புகிறேன்’, ஜீவனின் ‘திருட்டு பயலே’, ‘சீயான்’ விக்ரமின் ‘கந்தசாமி’, பாபி சிம்ஹாவின் ‘திருட்டு பயலே 2’ என அடுத்தடுத்து பல படங்களை இயக்கினார் இயக்குநர் சுசி கணேசன். தற்போது, இவர் இயக்கிய ‘விரும்புகிறேன்’ படம் தொடர்பாக சில சுவாரஸ்யமான விஷயங்களை கூறியிருக்கிறார்.

இதையும் பாருங்க : நீச்சல் குளத்தில் மூழ்கி இறந்த மகள். நினைவு நாளில் பாடகி சித்ரா உருக்கமான பதிவு.

Advertisement

என்ன தான் ரிலீஸான வகையில் ‘ஃபைவ் ஸ்டார்’ முதல் படமாக இருந்திருந்தாலும், ஒரிஜினலாக அவரது ஃ பர்ஸ்ட் படமாக எடுக்கப்பட்டது ‘விரும்புகிறேன்’ தானாம். ஆனால், அந்த படம் சில காரணங்களால் லேட்டாக வெளி வந்தது. நான் ‘விரும்புகிறேன்’ படத்தின் கதையை முதன் முதலில் ‘மிஸ்ரி எண்டர்ப்ரைசஸ்’ எஸ்.செயின் ராஜ் ஜெயினிடம் தான் சொன்னேன்.

அப்போது செயின் ராஜ் ஜெயினுடன் அவரது நண்பர்களான தயாரிப்பாளர் கருமாரி கந்தசாமியும், இயக்குநர் டி.பி. கஜேந்திரனும் நான் சொன்ன கதையை கேட்டனர். கதை அவங்களுக்கு ரொம்பவும் பிடிச்சு போய், இதுல விஜய் நடிச்சா சூப்பரா இருக்கும்னு சொன்னாங்க. விஜய்யின் அப்பாவும், பிரபல இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகரை சந்தித்து இக்கதையை சொன்னேன்.

இதையும் பாருங்க : கணவரின் பிறந்தநாளில் லைவ் சாட் வந்த ஸ்ரேயாவின் உடல் அங்கம் குறித்து மோசமாக பேசிய நபர். கணவர் கொடுத்த பதிலை பாருங்க. வீடியோ இதோ.

Advertisement

இதுல இன்னும் சில ஆக்ஷன் காட்சிகளை சேர்த்துக் கொள்ளுங்கள் என்று எஸ்.ஏ.சந்திரசேகர் கூறினார். இதற்கிடையில் இயக்குநர் டி.பி. கஜேந்திரன் மூலமாக பிரபல நடிகர் முரளியை சந்தித்து இக்கதையை சொன்னேன். அவருக்கு கதை பிடித்து விட்டதால். ‘சத்யஜோதி ஃபிலிம்ஸ்’ தியாகராஜனிடம் அனுப்பி வைத்தார். ஆனால், அவர் நடிகர் முரளி வேண்டாம் நடிகர் பிரஷாந்தை வைத்து பண்ணலாம் என்று சொன்னார்.

Advertisement

அதன் பின்னர் பிரஷாந்தை கமிட் செய்தோம். படம் ஆரம்பிப்பதற்கு முன்பு சில காரணங்களால் தயாரிப்பாளர் தியாகராஜன் விலகினார். பின், பிரஷாந்த் சொன்ன தயாரிப்பாளர் மேரி ஃபிரான்சிஸை வைத்து ‘விரும்புகிறேன்’ படத்தை துவங்கினோம் என்று இயக்குநர் சுசி கணேசன் தெரிவித்திருக்கிறார். இதில் பிரஷாந்திற்கு ஜோடியாக சினேகா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement