நீச்சல் குளத்தில் மூழ்கி இறந்த மகள். நினைவு நாளில் பாடகி சித்ரா உருக்கமான பதிவு.

0
84275
chitra

தமிழ் சினிமாத் துறையில் சின்னக் குயில் சித்ரா என்று சொன்னால் தெரியாதவர் யாரும் இருக்க முடியாது. மனதை வருடும் ஏராளமான பாடல்களை பாடி உள்ளார். இவர் பல்வேறு மொழிகளில் 25,000-க்கும் அதிகமான பாடல்களைப் பாடி சாதனை படைத்துள்ளார். தனது பாடலுக்காக 6 முறை தேசிய விருதுகள் உட்பட பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். பாடகி சித்ரா அவர்கள் சினிமா துறைக்குள் நுழைந்து 40 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது. இவருடைய குரலை வைத்தே சித்ரா தான் பாடியிருக்கிறார் என்று சொல்லலாம்.

Singer Chithra pays homage to late daughter on birthday | KS ...

அந்த அளவுக்கு இவருடைய குரல் மிகவும் பரிச்சயம். இவர் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி, பெங்காலி, ஒரியா, பஞ்சாலி, குஜராத்தி என அனைத்து மொழிகளிலுமே பாடியுள்ளார். மிகவும் பிரபலமான சித்ரா அவர்கள் விஜய சங்கர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பாடகி சித்ராவிற்கு ஒரே மகள் நந்தனா இருந்தார்.

இதையும் பாருங்க : விசு இயக்கத்தில் 1987 – ல் எம் எஸ் பாஸ்கர் அறிமுகமான முதல் படம் இது தான். எப்படி இருக்கார் பாருங்களேன்.

- Advertisement -

சித்ரா அவர்கள் தனது மகளை எந்தவொரு நிகழ்ச்சிக்குச் சென்றாலும் கூடவே அழைத்துச் செல்வார். 2011-ம் ஆண்டு சித்ரா துபாய் சென்றிருந்த போது அவரது மகள் நந்தனாவையும் அழைத்து சென்று உள்ளார். அப்போது சித்ரா மகள் நந்தனா நீச்சல் குளத்தில் மூழ்கி அநியாயமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் ஒட்டுமொத்த திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தியது.

I have heard people say that each birth has a purpose and will leave to the eternal world after finishing that purpose…

K S Chithra ಅವರಿಂದ ಈ ದಿನದಂದು ಪೋಸ್ಟ್ ಮಾಡಲಾಗಿದೆ ಸೋಮವಾರ, ಏಪ್ರಿಲ್ 13, 2020

இந்நிலையில் பாடகி சித்ரா அவர்கள் தனது மகளின் நினைவு தினத்தை முன்னிட்டு “உன்னை மிஸ் செய்கிறேன் நந்தனா” என்று உருக்கமான பதிவை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் கூறி இருப்பது, ஒவ்வொரு பிறப்புக்கும் ஒரு காரணம் உண்டு. அந்தக் காரணம் முடிந்த பின் மறு உலகத்துக்குச் செல்வோம் என்று மக்கள் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

-விளம்பரம்-

காலம் சிறந்த மருந்து என்றும் சொல்வார்கள். ஆனால், கஷ்டத்தில் இருக்கும் மக்களுக்குத் தான் தெரியும் அது உண்மையில்லை என்று. என்னுடைய காயம் இன்னும் அப்படியே வலியுடன் இருக்கிறது. உன்னை மிஸ் செய்கிறேன் நந்தனா” என்று நெஞ்சை உலுக்கும் அளவிற்கு அவருடைய பதிவு உள்ளது. தற்போது இந்த பதிவு சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. மேலும், தனது மகளின் மறைவையடுத்து மகள் நினைவாக பல்வேறு சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகிறார் சித்ரா.

இதையும் பாருங்க : நயன்தாராவை எங்கு பார்த்தாலும் அறைந்துவிடுவேன். பிரபு தேவா மனைவியின் கோபமான பேட்டி.

சமீபத்தில் கேரளாவின் பருமுலோவில் உள்ள புனித கிரிகோரியஸ் சர்வதேச கேன்சர் மையத்தில் கீமோ தெரபி சிகிச்சைப் பிரிவை தனது சொந்த செலவில் கட்டிக் கொடுத்துள்ளார். தற்போது பாடகி சித்ரா அவர்கள் பிரபல தொலைக்காட்சி நடத்தும் பாடல் ரியாலிட்டி ஷோவில் நடுவராக உள்ளார். இந்த பாடல் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் மக்கள் மனதை கொள்ளை கொண்டு உள்ளார்.

Advertisement