சஞ்சீவ் கூட இல்ல, விஜய் கேங்கில் இவர் இருந்தால் அவருடைய சத்தம் மட்டும் தான் கேட்கும் – விஜய்யின் அம்மா சொன்ன விஷயம்.

0
616
vijay
- Advertisement -

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கி வரும் நடிகர் விஜய், அவரது அப்பா சந்திரசேகர் மூலமாக திரையுலகிற்கு வந்தாலும் தனது தனிப்பட்ட திறமையால் இன்று ஒரு உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார். விஜய்யை பொறுத்த வரை அவர் படப்பிடிப்பில் மிகவும் அமைதியாக இருப்பார். யாருடன் அவ்வளவாக பேச மாட்டார் என்று தான் அவருடன் பணியாற்றியவர்கள் கூறுவார்கள். ஆனால், விஜயின் மறுபக்கத்தை அறிந்திருப்பது அவர்களது நண்பர்கள் மட்டும் தான்.

-விளம்பரம்-

விஜய் நண்பர்கள் குறித்து அவரது தாய் கூறுவது என்னவென்றால். விஜய் நண்பர்கள் சஞ்சீவ், ஸ்ரீசாந்த்,மனோஜ்,ராம்குமார். அவர்களுடன் சேர்த்து விஜய் ஐந்து பேர். இதில் சஞ்சீவ் விஜய் நெருங்கிய நண்பர்கள் சஞ்சீவ் மட்டுமில்லாமல் அவர் குடும்பத்தாரும் விஜய்யுடன் மிகவும் நெருக்கமானவர்கள்.

- Advertisement -

காலேஜ் படிக்கும் போது காலையிலே விஜய் என்னிடம் நண்பர்கள் வருகிறார்கள் உங்களுக்கு எது செய்ய முடியுமோ செய்யுங்கள் என கூறி விடுவார்.நானும் விஜய்க்கு பிடித்தார் போல் நான்வெஜ் செய்து வைப்பேன். அனைவருமே வந்து புல் கட்டு கட்டுவார்கள் அதிலும் சஞ்சீவி இன்னும் அதிகமாகவே கட்டுவார்.அந்தக் கூட்டத்தில் ஸ்ரீசாந்த் தான் தலைவர் அவனின் பேச்சு சத்தம் மட்டுமே தான் கேட்டுக் கொண்டிருக்கும் விஜய் அவர்களின் சிரிப்பு சத்தம மட்டும்தான் கேட்கும்.

அரட்டைக்கு பஞ்சம்மில்லை :-

ஸ்ரீசாந்த் மிகவும் ஹியுமர்சென்ஸ் உடன் சிரிக்க வைத்துக் கொண்டே இருப்பான். அவர்கள் வீட்டிலேயே இருப்பது போல் தான் இருக்கும் திடீரென காணாமல் போய்விடுவார்கள் பார்த்தால் படத்திற்கு சென்றிருப்பார்கள் இல்லனா வெளியே எங்கேயும் சென்று இருப்பார்கள். அதைவிட நுங்கம்பாக்கத்தில் உள்ள எல்.எம்.எம் கல்யாண மண்டபத்தில் அரட்டை அடித்துக் கொண்டிருப்பார்கள் லொயலா காலேஜ் பக்கமாம்.அதுதான் அவர்கள் சந்திப்பு இடமும் அரட்டை அடிக்கும் இடம்.

-விளம்பரம்-

உயிர்தோழன் சஞ்சீவ் :-

சஞ்சீவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பின் அறிகுறிகள் போன்று இருந்ததால் . இதனால் கலக்கம் அடைந்த சஞ்சீவ் தன் மனைவி மற்றும் குழந்தைகளை மாமியார் வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டு அவர் தனியாக இருந்தார். அப்பொழுது விஜய் போன் போட சஞ்சீவ் நடந்ததை கூறியிருக்கிறார். வீட்டில் தனியாவா இருக்க, சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவ என்று விஜய் கேட்டிருக்கிறார். போனை வைத்த 15வது நிமிடத்தில் விஜய் உணவுடன் சஞ்சீவ் வீட்டு வாசலில் வந்து நின்றிருக்கிறார். கொரோனா போன்று அறிகுறிகள் இருந்ததால் சஞ்சீவ் விஜய்யை சந்திக்கவில்லை. இதையடுத்து சஞ்சீவ் வீட்டு காவலாளியிடம் உணவை கொடுத்துவிட்டு சென்றார் விஜய்.

நன்பர்கள் மத்தியில் சரசரியான மனிதன் :-

தமிழ் திரையுலகம் கொண்டாடும் ஒரு பெரிய ஹீரோவாக இருந்தாலும் நண்பர்களை பொறுத்தவரை, தான் எப்பொழுதுமே சாதாரண ஆள் என்பதை நிரூபித்துவிட்டார் விஜய். அவர் நினைத்திருந்தால் யாரிடமாவது சாப்பாட்டை கொடுத்து அனுப்பியிருக்க முடியும். ஆனால் தானே வந்ததில் தான் தனித்து நிற்கிறார் விஜய் என்று இந்த நண்பர்கள் தினத்தில் ரசிகர்கள் பெருமையாக பேசுகிறார்கள்.

Advertisement