விஜய்யும் அஜித்தும் எப்படி இருப்பார்கள். ஓப்பனாக பதில் அளித்த விஜய்யின் தாயார் ஷோபனா.

0
14008
vijay-mother
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் ரஜினிகாந்த்– கமலஹாசனுக்கு பிறகு நம்பிக்கை நட்சத்திரங்களாக திகழ்பவர்கள் அஜித்-விஜய். அதுமட்டும் இல்லாமல் தற்போது வளர்ந்து வரும் கால கட்டங்களில் இவர்கள் இருவரும் தான் சினிமா உலகில் நம்பிக்கை தூண்கள் என்று கூட சொல்லலாம். கமல், ரஜினி படங்களுக்கு பிறகு அதிக வசூலையும் ரசிகர்கள் கூட்டத்தையும் சேர்த்தது இவர்கள் இருவரும் தான். மேலும், இவர்களுக்கு இந்தியாவில் மட்டுமில்லாமல் உலக அளவிலும் ரசிகர்கள் உள்ளார்கள். அதோடு பாக்ஸ் ஆபிஸில் இவர்களுடைய படம் தான் முதலிடத்தில் இருக்கும். சமீபத்தில் கூட அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் படம் திரையரங்குகளில் வெறித்தனமாக வசூல் செய்தது. இதனை தொடர்ந்து தளபதி விஜய் அவர்கள் தற்போது “தளபதி 64” என்ற படத்திலும் நடித்துக் கொண்டு வருகிறார்.

-விளம்பரம்-
Image result for vijay mother interview

- Advertisement -

தல அஜித் அவர்களின் இந்த வருடம் வெளியான ‘விசுவாசம், நேர்கொண்ட பார்வை’ படமும் சூப்பர் டூப்பர் பிளாக் பஸ்டர் படங்களாக அமைந்தது. தல அஜித் அவர்கள் வலிமை படத்தில் மும்முரமாக நடித்து கொண்டு இருக்கிறார். இருந்தாலும் அஜித், விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் செய்யும் அட்டூழியங்களுக்கு அளவே இல்லை. எப்போதுமே விஜய் மற்றும் அஜீத் ரசிகர்கள் இடையே சண்டை, சச்சரவு இருந்து கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில் பிரபல நிகழ்ச்சி ஒன்றில் விஜய்யின் தாயார் ஷோபனா சந்திரசேகர் அவர்கள் கலந்து கொண்டு உள்ளார். அதில் அவர் கூறியது, விஜய் மற்றும் அஜீத் இருவரும் இணைந்து நடித்த படம் ‘ராஜாவின் பார்வையிலே’.

இதையும் பாருங்க : இணையத்தில் வைரலாகும் நடிகர் விக்ரமின் குடும்ப புகைப்படம்.

அந்தப் படத்திலிருந்து அஜித் குடும்பத்துடன் நாங்கள் உறவு முறையாக தான் இருக்கிறோம். இன்னும் சொல்ல வேண்டும் என்றால் நடிகை ஷாலினியை சினிமா திரை உலகிற்கு அறிமுகப்படுத்தி வைத்தது என் கணவர் சந்திரசேகர் தான். அன்று முதல் இன்று வரை எங்களுடைய உறவு நீடித்துக் கொண்டு தான் இருக்கிறது. விஜயும், அஜித்தும் நல்ல நண்பர்களாக தான் உள்ளார்கள். ஆனால், ரசிகர்கள் தான் நீ பெரிய ஆளா? நான் பெரியாளா? என்றும், என்னுடைய தளபதி தான் சூப்பர்? என்னுடைய தல தான் சூப்பர்? என்ற பிரச்னையை உருவாக்குகிறார்கள். உண்மையிலேயே அஜித்தும் விஜயும் நெருங்கிய நண்பர்கள். நான் விஜயை எப்படிப் பார்க்கிரேனோ, அதே போல் தான் அஜித்தையும் என் மகனாக பார்க்கிறேன்.

-விளம்பரம்-
Image result for vijay mother interview

நான் ஒரு முறை விஜய் உடன் இணைந்து விளம்பரத்தில் நடித்து இருந்தேன். அதற்கு பிறகு விஜய் உடன் சேர்ந்து நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. விஜயுடன் மீண்டும் சேர்ந்து படிக்க எனக்கு ஆசை. விஜய்க்கு பிடித்த உணவு மட்டன் பிரியாணி மற்றும் தோசை. சிறுவயதில் விஜய் மிக சுட்டித்தனமான, குறும்புக்கார பிள்ளையாகத் தான் இருந்தார். ஆனால், அவரது தந்தையின் மரணத்திற்குப் பிறகு தான் இந்த அளவுக்கு விஜய் அமைதியாக மாறி விட்டார் என்று ஷோபா சந்திரசேகர் அவர்கள் பல விஷயங்களை கூறியிருந்தார். மேலும், சோபனா சந்திரசேகர் அளித்த பேட்டியை பார்த்தாவது விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் ஒருத்தருக்கு ஒருத்தர் சண்டை போட்டுக் கொள்ளாமல் இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement